The Ass & the Lap Dog – நாயும் கழுதையும்

The Ass & the Lap Dog – நாயும் கழுதையும் :- ஒரு ஊருல ஒரு பெரிய தோட்டம் இருந்துச்சு

அந்த தோட்டத்துல ஒரு பெரிய வீடு வச்சிருந்தாரு ஒரு முதலாளி

அவரு ஒரு நாய்குட்டியும் பொதிகளை சுமக்க ஒரு கழுதையும் வச்சிருந்தாரு

அந்த முதலாளி நாய்குட்டியையும் கழுத்தையுயும் நல்லபடியா பார்த்துக்கிட்டாரு

ஆனா தன்னைவிட அந்த நாய்க்குட்டி மேல முதலாளி ரொம்ப பாசமா இருக்கிறதா நினச்சு ரொம்ப வருத்தப்பட்டுச்சு அந்த கழுத

ஒருநாள் அந்த முதலாளி தோட்டத்துல உக்காந்து வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தாரு

அப்ப அங்க வந்த நாய்க்குட்டி அவரு மடியில ஏறி அவரோட கைகளையும் முகத்தையும் தன்னோட நாக்கால நக்குச்சு

உடனே சந்தோசமான அந்த முதலாளி ஒரு பெரிய பிஸ்கட்ட எடுத்து அதுக்கு கொடுத்தாரு

அத பார்த்த அந்த கழுதயும் ஓடிப்போயி முதலாளி மேல ஏறி நாக்கால அவரோட கைய நக்க ஆரம்பிச்சுச்சு

அதுல நிலை தடுமாறி போனாரு அந்த முதலாளி

பக்கத்துல இருந்த வேலை ஆட்கள் வேகமா ஓடிவந்து கழுதை கிட்ட இருந்து முதலாளிய காப்பாத்துனாங்க

வித்தியாசமா நடந்துகிட்ட கழுதைக்கு மூளை குளம்பிடுச்சுனு அத சந்தைக்கு கொண்டு போயி வித்துட்டாங்க

நீதி : உங்கள் இயல்புக்கும், குணத்துக்கும் முரணான வகையில் நடந்து கொண்டு நன்மதிப்பைப் பெற முயற்சிக்காதீர்கள்