The Wolf & the House Dog – ஓநாயும் வீட்டு நாயும்

The Wolf & the House Dog – ஓநாயும் வீட்டு நாயும் : ஒரு ஓநாய் கிராமத்துக்கு பக்கத்துல இருக்குற காட்டுக்குள்ள வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அது ரொம்ப பஞ்சமான காலம்கிறதுனால ரொம்ப நாளாவே அந்த ஓநாய்க்கு சரியான வேட்டையும் சாப்பாடும் கிடைக்கல

எலும்பு துண்டுகள சாப்பிட்டு வாழ்ந்துவந்தது அந்த ஓநாய் ,ஒருநாள் அதுக்கு ரொம்ப பசிச்சுச்சு

அதனால கிராமத்துக்குள்ள போயி எதாவது உணவு கிடைக்குமான்னு பார்த்துச்சு ஓநாய்

அங்க நிறைய வீட்டு நாய்கள் இருக்குறத பார்த்துச்சு ,அதுங்க எல்லாம் நல்லா சாப்பிட்டு குண்டா இருக்குறத பார்த்துச்சு ஓநாய்

இந்த நாய்களுக்கு தினமும் நல்ல சாப்பாடு கிடைக்கும் போலன்னு நினைச்ச ஓநாய் ஒரு வீட்டு நாய்கிட்ட போயி பேசுச்சு

நீங்க தினமும் வேட்டையாடுவீங்களா வேட்டையாட மிருகங்கள் இந்த கிராமத்துல நிறைய இருக்கானு அந்த வீட்டு நாய்கிட்ட கேட்டுச்சு

அதுக்கு கலகலன்னு சிரிச்சிச்சு அந்த வீட்டுநாய் , வீட்டை காவல் காக்குற எங்களுக்கு வேட்டையாட அவசியம் கிடையாது எங்க முதலாளியே தினமும் இறைச்சி சாப்பாடு கொடுப்பாருனு சொல்லுச்சு

அத கேட்ட ஓநாய்க்கு அதிசயமா போச்சு ,உடனே அந்த வீட்டுநாய் நீங்களும் எங்க கூடவே இருங்க உங்களுக்கும் தினமும் சாப்பிடும் நிறய ஓய்வும் கிடைக்கும்னு சொல்லுச்சு

அப்பத்தான் அந்த வீட்டு நாயோட முதுகுல ஒரு வெட்டும் , கழுத்துல ஒரு தளும்பும் இருக்குறத பார்த்துச்சு

உடனே எப்படி இந்த வெட்டும் தளும்பும் வந்துச்சுனு கேட்டுச்சு ஓநாய்

அதுக்கு அந்த வீட்டுநாய் சொல்லுச்சு ஒருநாள் சேட்டை செஞ்சதால எங்க முதலாளி ஒரு தடிய எடுத்து அடிச்சாரு அதனால அந்த வெட்டு விழுந்துச்சு

தினமும் ராத்திரி நாங்க வெளிய போகக்கூடாதுனு கழுத்துல சங்கிலி போட்டு கட்டி வச்சிடுவாங்க அந்த தழும்புதான் இதுனு சொல்லுச்சு

அப்பத்தான் ஓநாய்க்கு புரிஞ்சது எவ்வளவு உணவு கிடைச்சாலும் தனக்கு இருக்குற சுதந்திரம் இந்த நாய்களுக்கு கிடையாதுங்குறத உணர்ந்துச்சு அந்த ஓநாய்

உடனே நல்ல உணவு கிடைக்கலைனாலும் தனக்கு இருக்குற சுதந்திரம் ரொம்ப பெருசுனு புரிஞ்சிகிட்டு அங்க இருந்து திரும்ப காட்டுக்குள்ள ஓடி போய்டுச்சு

அப்ப அந்த ஓநாய்க்கு கொஞ்சம் உணவு கிடைச்சாலும் சுதந்திரமா இருக்குற உணர்வு அதுக்கு இருந்த கவலை எல்லாம் போக்கிடுச்சு

நீதி :சுதந்திரத்தைப் போல மதிப்புக்குரியது எதுவுமில்லை