The Old Lion & the Fox – வயதான சிங்கமும் புத்திசாலி நரியும்

The Old Lion & the Fox – வயதான சிங்கமும் புத்திசாலி நரியும் : ஒரு காட்டுல ஒரு சிங்கம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அந்த சிங்கத்துக்கு ரொம்ப வயசாகிடுச்சு அதனால் அதோட பல் எல்லாம் தேஞ்சிபோயி நகம் எல்லாம் பிஞ்சி போயி இருந்துச்சு

அதனால அந்த வயசான சிங்கத்தினால வேட்டையாடி உணவு உன்ன முடியல

அதனால காட்டுல இருக்குற மிருகங்கள் கிட்ட தனக்கு வயாகிடுச்சு,அடுத்த ராஜாவா வர்றதுக்கு யாருக்கெல்லாம் விருப்பமோ அவுங்க எல்லாம் ஒவ்வொருநாளும் ஒவ்வொருத்தரு சிங்கத்தோட குகைக்கு போயி சிங்க ராஜா கேள்விக்கு பதில் சொல்லி போட்டியில ஜெயிச்சி புது காட்டு ராஜாவா ஆகிக்கிடலாம்னு அறிவிப்பு செஞ்சுச்சு

இத கேள்விப்பட்ட மிருகங்கள் காட்டு ராஜாவா ஆகற ஆசையில ஒன்னொன்னா சிங்கத்தோட குகைக்கு போச்சு

ஆனா அந்த வயசான சிங்கம் அந்த மிருகங்கள் குகைக்குள்ள வந்ததும் அதுங்கள சுலபமா பிடிச்சு சாப்பிட்டுக்கிட்டே இருந்துச்சு

ஒருநாள் ஒரு புத்திசாலி நரி சிங்கத்தை பார்க்க வந்துச்சு , அப்ப அந்த வயசான சிங்கம் வாசல்ல படுத்து இருந்துச்சு

நரிய பார்த்ததும் ஓஹ் காட்டுராஜா போட்டிக்கு வந்தீங்களா உள்ள வாங்கனு குகைக்குள்ள கூப்பிட்டுச்சு சிங்கம்

ஆனா புத்திசாலியான நரி சிரிச்சிகிட்டே சொல்லுச்சு ,அரசே உங்க குகை வாசல்ல நிறய மிருகங்களோட காலடி தடம் இருக்கு ஆனா ஒரு மிருகம் கூட வெளியில வந்த மாதிரி தெரியல

அதனால உங்களோட சூழ்ச்சி எனக்கு தெரிஞ்சிபோச்சுனு சொல்லி அங்க இருந்து வேகமா ஓடிப்போனதோட மட்டும் இல்லாம அடுத்து எந்த மிருகமும் சிங்கத்தை தேடி வராம பார்த்துக்கிடுச்சு

நீதி: புத்திசாலிகள் தோற்பதில்லை

நீதி : பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்