The Boys & the Frogs – சிறுவர்களும் தவளையும் :- ஒரு குளத்துக்கு பக்கத்துல சில சிறுவர்கள் விளையாண்டுக்கிட்டு இருந்தாங்க

அப்பத்தான் அந்த குளத்துல நிறய தவளைங்க இருக்குறத பார்த்தாங்க
உடனே ஒரு பையன் ஒரு சின்ன கல்ல எடுத்து குளத்துல இருக்குற தவளை மேல போட்டன்

உடனே அந்த தவளை பயத்துல துள்ளி குதிச்சுச்சு ,அத பார்த்த அந்த பையனுக்கு ரொம்ப சந்தோசம்
உடனே இன்னொரு கல்ல எடுத்து தவளைங்க மேல போட்டான்

அத பார்த்த எல்லா சிறுவர்களும் தங்களுக்கு கிடைச்ச கல்ல எடுத்து தவளைங்க மேல வீச ஆரம்பிச்சாங்க
அப்ப ஒரு தவளை வெளிய வந்து ,தம்பிங்களா பலம் குறைந்த எங்க கிட்ட உங்க வீரத்தை காட்டாதீங்க ,

எங்களுக்கு ரொம்ப பயமா இருக்குனு சொல்லுச்சு ,அத அந்த பசங்க கேக்கவே இல்ல
தொடர்ந்து கல்ல எடுத்து எரிஞ்சிகிட்டே இருந்தாங்க, அப்ப இன்னொரு தவளை வந்து ,எங்கள பிடிக்க இந்த பாம்பு வேற இந்த நேரத்துக்கு வரும் இதுல நீங்க வேற எங்கள துன்பறுத்துறீங்களேன்னு கேட்டுச்சு

பாம்பு வர்றத கேள்விப்பட்ட அந்த குட்டி பசங்களுக்கு ரொம்ப பயம் வந்திடுச்சு ,உடனே வேக வேகமா அங்க இருந்து ஓடி போய்ட்டாங்க
நீதி :- வலியவனுக்கு வலியவன் இந்த உலகத்தில் உண்டு
நீதி :- பலம் குறைந்தவர்களிடம் நமது வீரத்தை காட்ட கூடாது