The Fox & the Hedgehog – நரியும் முள்ளம்பன்றியும்

The Fox & the Hedgehog – நரியும் முள்ளம்பன்றியும் :- ஒருநாள் காட்டு பகுதியில நடந்துபோன நரி தண்ணிக்குள்ள விழுந்துடுச்சு

The Fox & the Hedgehog - நரியும் முள்ளம்பன்றியும்

ரொம்ப கஷ்டப்பட்டு நீச்சல் அடிச்ச நரி கடைசியில ஒரு காட்டு பகுதியில கரையேறுச்சு

அப்ப அதோட உடம்புல எந்த தெம்பும் இல்ல ,அதனால எழுந்திரிச்சு நடக்க கூட முடியல ,

The Fox & the Hedgehog - நரியும் முள்ளம்பன்றியும்

கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அடிபட்ட நரியோட உடம்பு முழுசும் ஈ மொய்க்க ஆரம்பிச்சுச்சு

அப்பத்தான் ஒரு முள்ளம்பன்றி அங்க வந்துச்சு ,வந்து நரியோட நிலைமையை பார்த்ததும் அதுக்கு ரொம்ப பாவமா போச்சு

நரியாரே நான் வேணும்னா அந்த ஈக்களை எல்லாம் விரட்டி விடவான்னு கேட்டுச்சு

அதுக்கு நரி சொல்லுச்சு ,அந்த ஈக்களை விரட்ட வேணாம் ,அது இருக்குறதுனால நான் செத்துட்டேன்னு என்ன தொந்தரவு செய்யாம போகுதுங்கனு சொல்லுச்சு

நீதி : இன்றைய நிலை மோசமானதாக இருக்கலாம் நாளை நிலை மாறும் ,அதுவரை இன்றைய நிலையில் ஏற்படும் தீமைகளை பொறுத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் அதைவிட பெரிய கஷ்டங்கள் ஏற்படலாம்