The Cat, the Cock, and the Young Mouse – பூனை சேவல் எலி கதை :- ஒரு தோட்டத்துல இருக்குற வீட்டுல ஒரு எலி இருந்துச்சு
அந்த எலிக்கு ஒரு குட்டி எலி பிறந்துச்சு , பிறந்து கொஞ்ச நாளே ஆன அந்த குட்டி எலி அம்மாகிட்ட சொல்லாம ஊர் சுத்த போச்சு
அந்த எலி அதுவரைக்கு மத்த மிருகங்களையோ ,வெளி உலகத்தையோ பார்த்தது இல்லை ,
அப்படி ஊர்சுத்த போன குட்டி எலி சாயந்திரம் திரும்பி வந்துச்சு ,அந்த எலியோட அம்மா ரொம்ப கோபப்பட்டு இன்னைக்கு என்ன என்ன நடந்துச்சுனு கேட்டாங்க
அதுக்கு அந்த குட்டி எலி ஒரு மிக பெரிய ராட்சசனையும் ,ஒரு கனிவான சாதுவயும் சந்திச்சேனு சொல்லுச்சு
அந்த எலி தொடர்ந்து சொல்லுச்சு ,நான் வெளியில போனதும் அவுங்க ரெண்டு பேரும் நின்னுகிட்டு இருந்தாங்க
அந்த ராட்சசன் கலர் கலர் தொகைகளோட , கூறிய நகங்களோட இருந்தான் ,கொக்கரக்கோ கொக்கரக்கோனு பயங்கரமா கூவிகிட்டே இருந்தான்
பக்கத்துல அந்த சாது இருந்தாரு ,வெண்மை நிறத்துல உடல் முழுசும் வெல்வட் போல மெது மெது தோலோட ,குட்டியா அழகான வாளோட இருந்தாரு
நான் அவர் கிட்ட போயி நட்பு வச்சிக்கிடலாம்னு கிட்ட போனேன் ,அப்ப அந்த ராட்சசன் வந்து கொக்கரக்கோனு கூவி எல்லாத்தையும் கெடுத்துட்டான்
நான் பயந்து போயி இங்க ஓடி வந்துட்டேனு சொல்லுச்சு
அப்பத்தான் அந்த அம்மா எலிக்கு தன்னோட குட்டி எலி யாரை சந்திச்சுச்சு ,யார் அந்த ராட்சசன் ,யார் அந்த சாதுனு எல்லாம் புரிஞ்சிச்சு
அந்த அம்மா எலி தன்னோட குட்டி கிட்ட சொல்லுச்சு ,நீ பார்த்து சாதுனு சொல்லுற உயிரினத்துக்கு பேரு பூனை ,நம்மள மாதிரி எலிகளை திங்கிறதுதான் அதோட வேலை ,அதோட தோற்றத்தை வச்சு அது சாதுனு நம்புறது தப்பு
அதே நேரத்துல அந்த பூனை உன்ன திங்க விடாம செய்ய கொக்கரக்கோனு கத்தி உன்ன காப்பாத்துன உயிரனம் பேரு சேவல் ,
எப்போதும் உருவத்த வச்சு ஒருத்தரோட குணத்தை எடை போட கூடாதுனு சொல்லி புரிய வச்சுச்சு அந்த அம்மா எலி
நீதி :-வெளித்தோற்றத்தை மட்டும் நம்பாதீர்கள்