கழுகும் முட்டாள் சேவல்களும்-The Fighting Cocks & the Eagle

கழுகும் முட்டாள் சேவல்களும்-The Fighting Cocks & the Eagle :- ஒரு தோட்டத்துல ரெண்டு முட்டாள் சேவல்கள் இருந்துச்சுங்க

அதுங்க எப்பவும் ஒன்னோட ஒன்னு சண்ட போட்டுக்கிட்டே இருக்கும்

எதுக்கு எடுத்தாலும் சண்ட போடுற அந்த ரெண்டு சேவல்களையும் முட்டாள் சேவல்கள்னு எல்லாரும் கூப்பிட ஆரம்பிச்சாங்க

ஒருநாள் அந்த ரெண்டு சேவல்களுக்கு சண்டை ரொம்ப முத்திடுச்சு

அதனால ரெண்டு கட்டி புரண்டு சண்ட போட்டுச்சுங்க ,அதுல ஒரு சேவல் இன்னொரு சேவலை கொன்னுடுச்சு

வெற்றி பெற்ற அந்த சேவல் ரொம்ப சந்தோஷத்துல கூரமேல ஏறி கூவுச்சு

அந்த நேரத்துல அங்க பறந்துகிட்டு இருந்த ஒரு கழுகு அந்த முட்டாள் சேவலை பிடிச்சிட்டு போய்டுச்சு

தங்களோட முட்டாள் தனதால ரெண்டு சேவல்களும் வீனா செத்து போச்சுங்க

நீதி : புகழ் என்பது ஏப்போதும் ஆபத்தானதே