The Monkey & the Cat – குரங்கும் பூனையும் -Aesop Tamil Fables

The Monkey & the Cat – குரங்கும் பூனையும் -Aesop Tamil Fables :- ஒரு கிராமத்து வீட்டுல ஒரு குரங்கும் பூனையும் இருந்துச்சுங்க

அதுங்கள தன்னோட செல்ல பிராணியா அந்த வீட்டுக்காரர் வளர்த்துக்கிட்டு வந்தாரு

அதனால அதுங்களுக்கு நிறய சாப்பாடு தேவையான விளையாட்டு பொருள் எல்லாமே சுலபமா கிடைச்சது

ஒருநாள் பூனையும் குரங்கும் குளிர்காயிரத்துக்கு போட்ருந்த வெறுப்பு பக்கத்துல இருந்து வேடிக்கை பார்த்துகிட்டு இருந்துச்சுங்க

அப்ப ஒரு முந்திரி கொட்ட அந்த நெருப்புல இருக்குறத பார்த்துச்சுங்க ரெண்டும்

அடடா பெரிய முந்திரி கொட்ட சாப்புட்டா நல்லா இருக்குமேன்னு ரெண்டும் நினச்சுச்சுங்க

அப்பத்தான் குரங்கு சொல்லுச்சு இந்த வீட்டுலயே துணிவானவன் நீங்கதான் ,எப்படி பார்த்தாலும் நீங்க தான் அந்த கொட்டைய சூடு படாம வெளியில எடுக்க தகுதியானவர்னு சொல்லுச்சு

உடனே ரொம்ப தைரியத்தோடு அந்த முந்திரி கொட்டைய வெளியில எடுக்க முயற்சி செஞ்சுச்சு பூனா

நெருப்புல இருந்த முந்திரி கொட்ட ரொம்ப சூடா இருந்துச்சு ,அதனால பூனையோட கை எல்லாம் சூடு பட்டுச்சு

ஆனா குரங்கு அந்த பூனைய உசுப்பேத்தி கிட்டே இருந்துச்சு ,கடைசியா பூன அந்த முந்திரி கேட்டாயா நெருப்புல இருந்து வெளியில எடுத்துடுச்சு

வெளியில வந்து விழுந்த முந்திரி கொட்டைய டபக்குனு எடுத்து தின்னுடுச்சு குரங்கு

சூடு பட்ட பூன முகஸ்துதி செஞ்ச குரங்கோட பேச்ச கேட்டு ஏமாந்து போனத நினச்சு வருத்தப்பட்டுச்சு

நீதி : முகஸ்துதி செய்பவர் உங்கள் உழைப்பில் தங்கள் தேவைகளை நிறைவேற்றுகிறார்கள்