காணாம போன கழுதை -Mulla Reports a Stolen Donkey- முல்லா ஒருநாள் பக்கத்து ஊருக்கு பயணம் போக வேண்டியதா இருந்துச்சு,

அந்த ஊர் ரொம்ப கிட்டக்க இருந்ததால நடந்தே போகலாம்னு முடிவு செஞ்சாரு ,உடனே தன்னோட கழுதைய தன்னோட வீட்டுலயே நல்லா கட்டி போட்டுட்டு ,நடை பயணமா பக்கத்து ஊருக்கு போனாரு.

மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்த முல்லாவுக்கு ரொம்ப அதிர்ச்சியா போச்சு ,அங்க அவரோட கழுதைய காணோம் ,அடடா கழுதையை யாரோ திருடிகிட்டு போய்ட்டாங்களேனு வருத்தப்பட்டார் முல்லா

வேகமா அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்கள கூப்பிட்டு கழுதைய காணோம்னு சொன்னாரு ,இத கேட்ட பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் அடடா முல்லா இது பெரிய பிரச்னை , உன்ன கழுதைய எங்க தேடியும் கண்டுபிடிக்க முடியல ,அப்ப இது ஏதோ திருட்டு பயலுக வேலையைத்தான் இருக்கும் நீங்க போலீஸ் கிட்ட புகார் கொடுங்கனு சொன்னாங்க

முல்லாவுக்கும் அதுதான் சரினு பட்டுச்சு ,உடனே போலீஸ் ஸ்டேஷன் போயி தன்னோட கழுதை காணாம போய்டுச்சுன்னு சொன்னாரு ,உடனே அங்க இருந்த போலீஸ் அதிகாரி ஒரு பேப்பரை எடுத்து டேபிள் மேல வச்சிக்கிட்டு ம் சொல்லுங்க எப்படி கழுதை திருடு போச்சுன்னு கேட்டாரு

இத கேட்ட முல்லாவுக்கு கோபம் வந்துடுச்சு , எனக்கு எப்படி தெரியும் ,நான்தான் அன்னிக்கு பக்கத்து ஊருக்கு போய்ட்டேனேனு சொன்னாரு
இத கேட்டா போலீஸ் அதிகாரிக்கு கோபம் வந்திடுச்சு ,இந்த ஆள் முட்டாளா இல்ல சும்மா நம்மள வெறுப்பேத்துறானானு அவருக்கு தோணுச்சு ,உடனே சொன்னாரு ,

அடடா அடுத்த தடவ திருட்டு நடக்குறப்ப பக்கத்துலயே உக்காந்து எப்படி திருட்டு நடந்துச்சுனு ஒரு பேப்பர்ல எழுதி கொண்டுவாங்கனு சொல்லி திட்டி அனுப்புச்சுட்டாரு அந்த காவல் அதிகாரி