Donkey and the Police-Chief-Mulla Tamil Stories- கழுதை கதை :- முல்லா ஒரு முறை சந்தைக்கு போயிட்டு ரொம்ப சோர்வா வீட்டுக்கு திரும்பி வந்தாரு

அங்க வந்து பார்த்தா வீட்டுக்கு பின்னாடி கட்டி போட்டு வச்சிருந்த கழுதைய காணோம்,பதறிப்போன முல்லா பக்கத்துல இருக்குற விளையாட்டு மைதானத்தில போயி தேடுனாரு

முல்லா எதையோ தேடுறத பார்த்த அங்க விளையாண்டுக்கிட்டு இருந்த குழந்தைங்க எல்லாம் என்ன முல்லா தேடுறீங்கன்னு கேட்டுச்சுங்க

அதுக்கு முல்லா சொன்னாரு நான் ஆசையா வளர்த்துக்கிட்டு வந்த கழுதை காணாம் போய்டுச்சுன்னு சொன்னாரு

அடடா முல்லா கவலைப்படாதீங்க நாங்க எல்லாரும் உங்களுக்கு தொணையா வாரோம் உங்க கழுதைய கண்டுபிடிக்கலாம்னு சொன்னாங்க

அப்படி தேடிகிட்டு இருக்கும் பொது காவல் அதிகாரி வீடு பக்கத்துல இருக்குறத பார்த்தாங்க , அப்ப ஒரு சுட்டி பையன் நேத்து எங்க அப்பா கோபத்துல சொன்னாரு புதுசா வந்திருக்கிற காவல் அதிகாரி ஒரு கழுதைன்னு , ஒரு வேல அது உங்க கழுதை அதிகாரியா வேசம்போட்டுகிட்டு வந்துருக்குமோனு நகைச்சுவையா கேட்டான்

இத கேட்ட முல்லா சிரிச்சுட்டார் ,தொடர்ந்து சொன்னாரு அந்த காவல் அதிகாரி லஞ்சம் வாங்குறதா ஊருக்குள்ள எல்லாரும் சொல்லுறாங்க அதனால அவரை உங்க அப்பா கழுதைன்னு சொல்லியிருப்பாருனு சொன்ன முல்லா மேலும் சொன்னாரு

என்னோட கழுத ஒரு அப்பாவி கழுத அதுக்கு லஞ்சம் வாங்க தெரியாதுன்னு சொன்னாரு ,இந்த விஷயம் அந்த புது காவல் அதிகாரிக்கு தெரிஞ்சது ,ரொம்ப வருத்தப்பட்ட அவரு

இந்த முல்லா குழந்தைகளை கூப்பிட்டு என்ன கழுதைக்கு கூட ஈடு இல்லைனு சொல்லிட்டாரு ,அவரு சொன்னது சரிதான் தீய பழக்க வழக்கம் காரணமா முட்டாள்தனமா லஞ்சம் வாங்குனது தவறுன்னு உணர்ந்தாரு ,அதுக்கு அப்புறமா லஞ்சம் வாங்காம நேர்மையா தன்னோட கடமைய செஞ்சு அந்த நாட்டிலேயே உயர்ந்த பதவிக்கு போனாரு

இத கேள்விப்பட்ட முல்லா குழந்தைகளுக்கு சொன்னாரு ,பார்த்தீங்களா நீங்க கழுதைன்னு சொன்ன ஒரு அதிகாரி ,தன்னோட தப்ப உணர்ந்தது மூலமா நல்ல குடிமகனா மாறிட்டாரு , எந்த ஒரு தவறும் திருத்தக்க முடியும் ,அத தொடர்ந்து செய்யாம ,அத பத்தி கவலை படாம நல்ல பிள்ளைகளா நீங்க வளரணும்னு சொன்னாரு