10 கழுதைகள் முல்லா கதை -Mullla Counts the Donkeys:- ஒரு நாள் முல்லா தன்னோட வீட்டு வாசல்ல ஓய்வெடுத்துகிட்டு இருந்தாரு

அப்ப அவர பார்க்க ஒரு நண்பர் வந்தாரு,முல்லா பக்கத்து ஊருல பெரிய திருவிழா நடக்க போகுது ,அதுல பெரிய சந்தையும் நடக்க போகுது ,நீங்க ஏன் அங்க போயி வியாபாரம் செய்ய கூடாதுனு கேட்டாரு

உடனே முல்லா சந்தோஷமாகிட்டாரு ,அடடா திருவிழான்னா பெரிய கூட்டம் வரும் அங்க வியாபாரம் செஞ்சா நிறய பணம் சம்பாதிக்கலாம்னு சந்தோஷப்பட்டாரு ,உடனே எங்கிட்ட நிறய உப்பு இருக்கு ஆனா ஒரே ஒரு கழுதை தான் இருக்கு நான் என்ன செய்யனு கேட்டாரு

அதுக்கு அந்த நண்பர் சொன்னாரு ,என் கிட்ட 9 கழுதைகள் இருக்கு வேணும்னு வாடகைக்கு தாரேன்னு ,ஒரு நாளைக்கு ஒரு கழுதைக்கு ஒரு ரூபா மட்டும் கொடுங்கன்னு சொன்னாரு ,இத கேட்ட முல்லாவுக்கு ரொம்ப சந்தோசம்

மறுநாள் அந்த நண்பரோட வீட்டுக்கு போன முல்லா 9 கழுதைகளையும் தன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அதோட முதுகுல உப்பு மூட்டைகளை ஏத்துனாரு ,தன்னோட கழுதையையும் சேர்த்து மொத்தம் பத்து கழுதைகளையும் பத்திரமா வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கணும்னு நினச்சுகிட்டே தன்னோட பயணத்தை தொடங்குனாரு

பக்கத்து ஊருக்கு போறதுக்கு காட்டு வழியா போறதுதான் ஒரே வழியா இருந்துச்சு ,அதனால் ரொம்ப பத்திரமா ,காட்டு மிருகங்கள் எதுவும் வந்து தன்னோட கழுதையையும் ,வாடகைக்கு வாங்குன கழுதைகளையும் பிடிச்சி தின்னுட்ட கூடாதுனு நினைச்சுகிட்டே கவனமா பயணம் செஞ்சாரு

அப்பத்தான் அவருக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வந்துச்சு ,உடனே கழுதைகள் எல்லாத்தையும் எண்ணி பார்த்தாரு ,மொத்தம் 9 கழுதைகள் தான் இருந்துச்சு ,இத பார்த்த முல்லாவுக்கு பகீருனு இருந்துச்சு ,ஆடா ஒரு கழுதைய காட்டு மிருகங்கள் பிடிச்சிட்டு போய்டுச்சு போலன்னு நினைச்சாரு

இது ரொம்ப ஆபத்தான பகுதியா இருக்கு இங்க நின்னு நேரத்தை வீண் செய்ய வேணாம்னு சொல்லிட்டு ,தொடர்ந்து பயணம் செஞ்சாரு ,அப்ப அவரு திடீர்னு திரும்ப ஒரு தடவ கழுதைகளை எண்ணி பார்த்தாரு அப்ப பத்து கழுதைகளும் சரியா இருந்துச்சு

அடடா நம்ம கழுதைகளுக்கு ஒன்னும் ஆகல பக்கத்துல எங்குட்டாவது போயிட்டு திரும்ப நம்ம கூடவே வந்து சேர்ந்துடுச்சுனு நினைச்சுகிட்டு திரும்பவும் பயணம் செய்ய ஆரம்பிச்சாரு

ஆனா குழப்பமான மனநிலையில இருந்த முல்லா திரும்பவும் கழுதைகளை எண்ணி பார்க்க ஆரம்பிச்சாரு ,அப்ப மறுபடியும் 9 கழுதைகள் தான் இருந்துச்சு ,கோபமான முல்லா தான் பயணம் செஞ்சுகிட்டு வந்த கழுதை மேல இருந்து கீழ இறங்குனாரு

இனிமே நான் நடந்தேதான் பயணம் செய்ய போறேன் , கழுதை மேல பயணம் செஞ்சா 9 கழுத்தான் எண்ணிக்கை காட்டுது , நடந்து பயணம் செஞ்சா கழுத்தகைகளோட எண்ணிக்கை சரியா இருக்குனு தனக்குள்ளேயே சொல்லிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சாரு
- அந்த முட்டாள் முல்லா கழுத்த மேல உக்காந்து இருக்கிறப்ப அந்த கழுதையையும் சேர்த்து என்ன மறந்துட்டாருனு உங்கள மாதிரி குழந்தைகள் கூட கண்டு பிடிச்சுடீங்களே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு