செக்கு கழுதையும் குரங்கும் – Foolish Donkey and a Monkey

செக்கு கழுதையும் குரங்கும் – Foolish Donkey and a Monkey-ஒரு காட்டுக்கு பக்கத்துல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு

அவரு தங்கி இருந்த வீட்டுல ஒரு எண்ணை எடுக்குற செக்கு இருந்துச்சு ,அந்த செக்க சுத்தி நடக்க ஒரு கழுதையும் வச்சிருந்தாரு அந்த விவசாயி

தினமும் காலைல இருந்து சாயந்திரம் வர அந்த செக்க சுத்திக்கிட்டே இருக்கும் அந்த கழுத

ஒரு நாள் ஒரு சேட்டைக்கார குரங்கு அந்த பக்கமா வந்துச்சு , அங்க ஓய்வெடுத்துகிட்டு இருந்த கழுதைய பார்த்ததும் அதுக்கு ஒரு யோசனை வந்துச்சு

நாம காட்ட கடக்க இந்த முட்டாள் கழுதையை பயன்படுத்திக்கிடலாம்னு திட்டம் போட்டுச்சு அந்த குரங்கு

உடனே அந்த கழுதை கிட்ட வந்து பேச்சு கொடுத்துச்சு குரங்கு ,இன்னும் எத்தனை நாள் இப்படி அடிமையா வாழ போறீங்க கழுதையாரே

எங்கூட வாங்க நாம இந்த காட்ட தாண்டி அடுத்து இருக்குற ஊருக்கு போயி நல்லா வாழலாம்னு சொல்லுச்சு

அத கேட்ட கழுதையும் சரினு சொல்லிட்டு குரங்கு கூட பயணம் போக ஆரம்பிச்சுச்சு

அப்ப ராத்திரி ஆனதால குரங்கு கழுதை மேல ஏறி படுத்துகிடுச்சு ,மெதுவா கழுத நடக்க ஆரம்பிச்சுச்சு

கழுதைய ஏமாத்தி அதுமேலேயே உக்காந்துகிட்டு ராத்திரி கூட பயணம் போறத நினச்சு ,தான்தான் இந்த உலகத்துலயே புத்திசாலின்னு இறுமாப்போட தூங்க ஆரம்பிச்சுச்சு அந்த குரங்கு

மறுநாள் சூரியன் உதிச்சதும் குரங்குக்கு ஒரே அதிர்ச்சியா போச்சு

தன்னோட வாழ்நாள் முழுசும் செக்க சுத்தி நடந்த கழுத ,ராத்திரி முழுசும் அந்த குடிசையவே சுத்திகிட்டு இருந்திருக்குனு அப்பதான் குரங்குக்கு தெரிஞ்சது

அப்ப சரியா அங்க வந்த விவசாயி நடந்தத புரிஞ்சிகிட்டு ஒரு குச்சி எடுத்து கழுதையையும் குரங்கையும் அடி பின்னிட்டாரு

உன்னால நான் கேட்டேன் என்னால நீ கெட்டேனு ரெண்டும் வலிதாங்க முடியாம அழுக ஆரம்பிச்சுச்சுங்க