The Tortoise and the Fox – நரியும் ஆமையும்

The Tortoise and the Fox – நரியும் ஆமையும்:-ஒரு பெரிய காட்டுல ஒரு ஆமையும் நரியும் நண்பர்களா இருந்தாங்க

அந்த ஆமைக்கு அதோட கனமான ஓட்ட பிடிக்கல ,இப்படி கனமான ஓடு இருக்குறதால தான் தன்னால வேகமா ஓட முடியல ,பறக்க முடியலன்னு வறுத்த பட்டுச்சு அந்த ஆமை

இறைவன் கொடுத்த உடல் எப்பவும் ஒவ்வொரு மிருகத்துக்கும் மாறு படும் ,ஒவ்வொரு மிருகத்துக்கு தனித்துவமான உடல் வாகு கடவுள் ஏன் கொடுத்துருக்காரு தெரியுமான்னு நரி கேட்டுச்சு

எனக்கு ஒன்னும் தெரியாது நீ தான் சொல்லேனு சொல்லுச்சு ஆமை

உடனே நரி சொல்லுச்சு ,ஒவ்வொரு மிருகத்தோட வாழ்விடத்த பொறுத்து இயற்கை கிட்ட இருந்தும் ,ஒவ்வொரு மிருகத்துக்கும் பொதுவா ஏற்படுற ஆபத்துகள் கிட்ட இருந்து காப்பாத்திக்கிடவும் அந்தந்த மிருகங்களுக்கு தேவையான உடல் அமைப்ப கொடுத்திருக்காரு

உன்னோட உடல்ல இருக்குற கனமான ஓடு உனக்கு உதவி செய்யிறதுக்கு தான் அமைஞ்சிருக்கும் அதனால அந்த ஓட்ட பார்த்து வருத்தப்படாதனு ஆறுதல் சொல்லுச்சு நரி

இத கேட்ட பிறகும் ஆமைக்கு திருப்தி இல்ல ,அப்பத்தான் ஒரு வேடன் அந்த நரியை தன்னோட வில்லுல குறி வச்சிருக்குறத பார்த்துச்சு ஆமை

உடனே அந்த நரிக்கு பாதுகாப்பா குறுக்க வந்து நின்னுகிடுச்சு ஆமை ,வேட்டை காரன் விட்ட அம்பு ஆமையோட முதுகுல பட்டு கீழ விழுந்திருச்சு

இத பார்த்த நரி நேரா வேட்டை காரண நோக்கி ஓடுச்சு ,நரி தன்ன நோக்கி வர்றத பார்த்த வேடன் அங்க இருந்து ஓடிட்டான்

இப்ப பார்த்தியா உன்னோட கனமான ஓடுதான் உன்னையும் என்னையும் காப்பாத்துச்சு ,இதே நேரம் உன்னோட ஓடு இல்லைனா ,வேடன் விட்ட அம்பு உன்ன கொன்னுருக்கும் ,

இனிமே உன்னோட உடம்ப பத்தி யோசிக்காம நல்லபடியா வாழ்க்கைய நடதுனு சொல்லுச்சு நரி ,

நரி சொன்னது எல்லாம் உண்மைனு புரிஞ்சிகிட்ட ஆமை அதுக்கு அப்புறமா நல்ல படியா வாழ்ந்துச்சு

Leave a comment