The Thief and the Donkey-கழுதை திருடர்கள்

The Thief and the Donkey-கழுதை திருடர்கள்:-ஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தாரு ,அவரோட விவசாய நிலத்துல விளைஞ்ச பொருளை எல்லாம் சந்தைக்கு கொண்டுபோக ஒரு கழுதை வாங்கணும்னு முடிவு செஞ்சாரு

அதனால சந்தைக்கு போயிட்டு ஒரு நல்ல கழுதைய வேல கொடுத்து வாங்குனாரு

காட்டு வழியா அவரு தன்னோட வீட்டுக்கு நடந்து போறப்ப மூணு திருடங்க அந்த விவசாயிய பார்த்தாங்க

அவருகிட்ட இருந்த அந்த கழுதைய எப்படியாச்சும் திருடனும்னு முடிவு செஞ்சாங்க

ஆனா அந்த நாட்ட ஆண்ட ராஜா ரொம்ப கண்டிப்பா இருந்தாரு ,திருடர்கள் எல்லாருக்கும் ரொம்ப பெரிய தண்டனை கொடுத்தாரு

அத நினச்சு மூணு திருடர்களும் பயந்தாங்க ,இருந்தாலும் திட்டம் போட்டு அந்த விவசாயிய ஏமாத்த நினைச்சாங்க ,அப்பத்தான் கழுதை திருடு போனத ராஜாகிட்ட போய் அந்த விவசாயி சொல்ல மாட்டாரு ,நமக்கும் எந்த பிரச்னையும் இல்லைனு நினைச்சாங்க

வெயில் ரொம்ப இருந்ததால ஒரு மரத்தடியில் படுத்து ஓய்வெடுக்க ஆரம்பிச்சாரு ,அப்ப ஒரு திருடன் அவர் கூடவே ஓய்வெடுக்குற மாதிரி நடிச்சான்

அப்படியே விவசாயி கிட்ட கொஞ்சம் பேச்சும் கொடுத்தான், இந்த காட்டுல மிருகங்கள் மாதிரி உரு மாறுற ராட்சசன் இருக்கானாம் ,அவன பார்த்தா எல்லாரும் ஓடிடுவாங்கலாம்னு சொன்னான் அந்த திருடன்

அத கேட்ட விவசாயி அத நம்பாம சிரிச்சிட்டு விட்டுட்டாரு ,கொஞ்ச நேரத்துல தூங்க ஆரம்பிச்சாரு அந்த விவசாயி

அப்ப இன்னொரு திருடன் அங்க வந்து கழுதையை கட்டி இருந்த கயித்த கழட்டி தன்னோட கழுத்துல மாட்டிகிட்டான்

இன்னொரு திருடன் அந்த கழுதையை வேற பக்கம் இழுத்துகிட்டு போய்ட்டான்

கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் தூக்கத்துல இருந்த விவசாயி அந்த திருடனை பார்த்தாரு ,கழுதைக்கு பதிலா ஒரு மனுஷன் இருக்கானேனு சத்தம் போட ஆரம்பிச்சாரு

உடனே பக்கத்துல இருந்த திருடன் அடடா இதுதான் அந்த மிருகங்கள் மாதிரி உரு மாறுற ராட்சசன் போல இருக்கு வாங்க ஓடிடலாம்னு சொல்லிட்டு ஓட ஆரம்பிச்சான்

விவசாயியும் வேற பக்கம் ஓட ஆரம்பிச்சாரு ,விவசாயி போனதுக்கு அப்புறமா தங்களோட புத்திசாலி தனத்தால விவசாயிய ஏமாத்துன மூணு திருடர்களும் அந்த கழுதைய சந்தையில வித்து பாகம் பிரிச்சிக்கிட்டாங்க