The Wolf & the Ass – ஓநாயும் கழுதையும்

The Wolf & the Ass – ஓநாயும் கழுதையும் :- ஒரு காட்டுக்கு பக்கத்துல ஒரு கழுதை மேஞ்சுக்கிட்டு இருந்துச்சு

அப்ப அங்க ஒரு ஓநாய் வந்துச்சு ,கழுதைய வேட்டையாட நினைச்ச ஓநாய் மெதுவா பதுங்கி பதுங்கி கழுதை கிட்ட வந்திடுச்சு

ஓநாய் தனக்கு ரொம்ப பக்கத்துல வந்தத பார்த்த கழுத ரொம்ப பயந்து போய்டுச்சு

ஆனா புத்திசாலியான கழுதைக்கு ஒரு யோசனை வந்துச்சு ,திடீர்னு நொண்டி நொண்டி நடக்க ஆரம்பிச்சுச்சு அந்த கழுதை

அத பார்த்த ஓநாய் ஏன் இப்ப நொண்டுற என்ன ஆச்சுன்னு கேட்டுச்சு

அதுக்கு அந்த கழுதை சொல்லுச்சு ,இந்த பகுதியில ஆபத்தான முற்கள் அதிகம் ,அதுல ஒன்னு என்னோட பின்னங்கால்ல குத்திடுச்சு

அதனால என்னால நடக்க முடியலன்னு சொல்லிட்டு ,ஓநாய் அவர்களே இப்ப நீங்க என்ன தின்னிங்கன்னா அந்த முள் உங்களோட வாயிலையும் குத்தினாலும் குத்திடும்

அதனால் எனக்கு பின்னாடி வந்து நில்லுங்க ,நான் காலை தூக்குறேன் அந்த முல்ல மட்டும் எடுத்துடுங்கனு சொல்லிச்சு

அதுவும் நல்லதுதான்னு நினைச்ச முட்டாள் ஓநாய் கழுதைக்கு பின்னாடி போய் நின்னுச்சு

அந்த நேரத்தை எதிர்பாத்திருந்த கழுதை தன்னோட பின்னங்கால்கள தூக்கி ஒரு எத்து விட்டுச்சு

அத எதிர்பார்க்காத ஓநாய் ரொம்ப தூரம் போய் விழுந்துச்சு

புத்திசாலியான கழுதை வேகமா பாதுகாப்பான இடத்துக்கு ஓடிடுச்சு

நீதி : புத்திசாலிகள் தோற்பதில்லை