The Two Pots – பித்தளை பானையும் மண்பானையும் :- ஒரு குடிசை வீட்டுல ரெண்டு பானைகள் இருந்துச்சு

ஒன்னு மண்ணுல செஞ்ச பானை இன்னொன்னு பித்தளைல செஞ்ச பானை
ஒருநாள் அந்த ரெண்டு பானைக்கும் கால் முளைச்சுச்சு

உடனே அந்த பித்தளை பானை சொல்லுச்சு அடடா நமக்கு கால்கள் முளைச்சிருச்சு இனிமே நாம சுதந்திரமா எங்க வேணும்னாலும் போகலாம்னு கத்துச்சு
ஆனா அந்த மண்பானை இந்த கால்களை வச்சிக்கிட்டு ரொம்ப அசஞ்சம்னா நமக்கு ஆபத்து வரும்னு யோசிச்சுச்சு

அப்ப அந்த பித்தளை பானை சொல்லுச்சு கால்கள் இருந்தும் சுதந்திரத்தை அனுபவிக்காம இந்த வீட்டுல இருந்து தினமும் அடுப்புல வேக வேணாம் வாங்க ரெண்டுபேரும் வெளியில போயி சுதந்திரமா இருக்கலாம்னு சொல்லுச்சு
பித்தளை பனையோட வற்புறுத்தல் காரணமா அந்த மண்பானையும் அதோட சேர்ந்து வெளியில போக ஆரம்பிச்சுச்சு

கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம் பித்தளை பானையோட மோதிக்கிட்ட மண்பானை சுக்கு நூறா ஒடஞ்சு போச்சு
நீதி : சம தகுதி உள்ளவர்களிடம் மட்டுமே நட்பு வைத்துக்கொள்ள வேண்டும்