The Travelers & the Purse – பயணியும் பணப்பையும்

The Travelers & the Purse – பயணியும் பணப்பையும் :- ஒரு பெரிய காட்டுப்பகுதியில ஒரு பெரிய ரோடு இருந்துச்சு

அதுல ரெண்டு பயனிங்க நடந்து போய்கிட்டு இருந்தாங்க

அப்ப ஒரு பயணி ஒரு பணப்பை கீழ கிடந்தத பார்த்து அத கையில டுத்தாரு

ஆஹா நான் கண்டெடுத்த இந்த பணப்பை எவ்வளவு கனமா இருக்கு நான் அதிர்ஷ்டக்காரன்னு சொன்னாரு

அதுக்கு உன் வார்த்தையில தவறு இருக்கு நாம கண்டெடுத்த பணப்பையில நிறய பணம் இருக்கு நாம அதிர்ஷ்ட காரங்கனு சொல்லுன்னு சொன்னாரு

அதுக்கு அந்த பைய கண்டெடுத்த பயணி இது நான் கண்டெடுத்த பை அத நான் உனக்கு கொடுக்க முடியாதுனு சொன்னாரு

அப்பத்தான் ஏய் திருடர்களா பணப்பையை எடுத்துட்டு எங்க ஓடுறீங்கன்னு அரண்மனை காவலர்கள் அவர்கள பாத்து ஓடி வந்தாங்க

அப்பத்தான் அடடா பணப்பையோட நம்மள பார்த்தா நம்ம ரெண்டு பேருக்கும் ஆபத்துனு பணப்பைய கண்டெடுத்த பயணி சொன்னாரு

அதுக்கு அந்த ரெண்டாவது பயணி சொன்னாரு நீ சொன்னதுதான் சரி , இனிமே நாம இல்ல நீ மட்டும்தான்

நீ கண்டெடுத்த பணப்பைய காவலர்கள் பார்த்தா உனக்குத்தான் ஆபத்துனு சொன்னாரு

நீதி : பச்சோந்தி குணம் மனிதர்களுக்குத்தான் அதிகம்