The Stubborn Elephant – ராமு யானை கதை

The Stubborn Elephant – ராமு யானை கதை :- ஒரு காட்டுல ராமுனு ஒரு யானை வாழ்ந்துகிட்டு வந்துச்சு

ரொம்ப பலசாலியான ராமு யானை யார் சொல்லுறதையும் கேக்காம திமிரோட இருந்துச்சு

காட்டு மிருகங்களையோ வயசுல மூத்த மிருகங்களையோ அது மதிக்காம திமிரோட இருந்துச்சு

ஒருநாள் மழையோட சூறாவளி வீசுச்சு ,அப்ப எல்லா மிருகங்களும் தங்களோட இருப்பிடத்துல பாதுகாப்பா இருந்துச்சுங்க

ஆனா ராமு யானை மட்டும் இந்த சூறாவளி என்ன என்ன செய்யும்னு சொல்லிட்டு காட்டுக்குள்ள சுத்திகிட்டு திரிஞ்சிச்சு

அப்ப ஒரு பெரிய மரம் ஒடஞ்சி ராமு யானை மேல விழுந்துடுச்சு

எவ்வளவு முயற்சி செஞ்சும் அந்த மரத்துக்கு அடியில மாட்டிக்கிட்ட ராமு யானையால வெளிய வரவே முடியல

மழை நின்னதுக்கு அப்புறமா காட்டு மிருகங்கள் ஒவ்வொண்ணா வந்து ராமு யானையை பார்த்துச்சுங்க

திமிர்பிடிச்ச இந்த யானைக்கு இது தேவைதானு சொல்லிட்டு நிறைய மிருகங்கள் அதுங்களோட வேலைய பார்த்துகிட்டு போயிடுச்சுங்க

ஆனா சில கரடிகளும் , புலிகளும் இன்னும் கொஞ்சம் பலசாலி மிருகங்கள் ஒண்ணா சேர்ந்து அந்த யானைய காப்பாத்துச்சுங்க

தனக்கு உதவி செஞ்ச மிருகங்களுக்கு நன்றி சொல்லிட்டு ,இனிமே பெரியவங்க சொல்படி நடப்பேன்

மூத்தவங்க சொல் பேச்சு கேக்காம திரிஞ்ச ராமு யானைக்கு நல்ல புத்தி வந்துச்சு