The Thieving Fox-திருட்டு நரியும் புத்திசாலி முயலும்

The Thieving Fox-திருட்டு நரியும் புத்திசாலி முயலும் :-ஒரு காட்டுல ஒரு தந்திரகார நரி வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அந்த நரி சொந்தமா உணவு சேகரிச்சு சாப்பிடலாம காட்டு மிருகங்கள் கிட்ட இருந்து திருடி தின்னுகிட்டே இருந்துச்சு

இத பார்த்த எல்லா மிருகங்களும் நரிகிட்ட பத்திரமா நடந்துக்கிச்சுங்க ,நரி கண்ணுல படுறமாதிரி எதையும் வைக்காதுங்க அதுங்க

இருந்தாலும் அந்த பொல்லாத நரி எப்படியோ காட்டு மிருகங்கள் சேமிச்சு வச்சிருக்கிற உணவு தானியங்கள் எல்லாத்தையும் கண்டுபிடிச்சி திருடி தின்னுகிட்டே இருந்துச்சு

அப்பத்தான் ஒரு புத்திசாலி முயல் அந்த நரிய பார்த்துச்சு ,அடடா சொந்தமா உணவு சேமிச்சு வாழ்கை நடத்தாம இப்படி திருடி திங்குற நரிக்கு சரியான பாடம் புகட்டணும்னு நினைச்சிச்சு

உடனே காட்டு பகுதியில ஒரு நல்ல இடத்துல நான் விவசாயம் பார்க்க போறேன் ,அதனால இந்த இடத்துல வெள்ளரி தோட்டம் போட போறேன்னு சொல்லிட்டு கொஞ்ச நேரம் வேலை செஞ்சுச்சு

இத தூரத்துல இருந்து பார்த்த நரி வெள்ளரி தோட்டம் போடுதா முயல் ,அப்ப கொஞ்ச நாள் கழிச்சு நமக்கு சரியான தீனி இருக்குனு நினைச்சுகிட்டு தினமும் அங்க வந்து வெள்ளரி கச்சிடுச்சான்னு பார்த்துகிட்டே இருந்துச்சு

கொஞ்ச நாள் கழிச்சு வெள்ளரி காய் காய்க்க ஆரம்பிச்சுச்சு ,உடனே அங்க வந்த நரி வேகா வேகமா வெள்ளரி தோட்டத்துக்குள்ள புகுந்து வெள்ளரி எல்லாத்தையும் பிச்சி திங்க ஆரம்பிச்சுச்சு

அப்பா திடீர்னு நரிக்கு உடம்பு எல்லாம் அறிக்கை ஆரம்பிச்சுச்சு ,கொஞ்ச நேரத்துல உடம்பு பூராம் தடிப்பு தடிப்பா வந்து அங்கேயே விழுந்துடுச்சு

அப்ப அங்க வந்த முயல் சொல்லுச்சு நீ பெரிய திருட்டு பயனு எனக்கு தெரியும் அதனாலதான் ஒவ்வொரு வெள்ளரி செடிக்கு பக்கத்துலயும் ஒரு அரிப்பு செடிய நட்டு வச்சேன்

வெள்ளரி பிடுங்குற அவசரத்துல நீ அந்த அரிப்பு செடியில் உடம்ப தெச்சதுனால தான் உனக்கு உடம்பு இப்படி ஆகிடுச்சுனு சொல்லுச்சு

அத கேட்ட எல்லா மிருகங்களும் அங்க வந்து நரிய பார்த்து சிரிச்சுச்சுங்க ,தங்களோட உழைப்ப எல்லாம் திருடி தின்ன நரிக்கு சரியான தண்டனை கிடைச்சுச்சுனு சொல்லிட்டு அங்க இருந்து போயிடுச்சுங்க.

உழைச்சு சாப்பிடாம அடுத்தவங்க பொருள திருடி தின்ன அந்த நரிக்கு யாருமே உதவ வரல

அப்பதான் இத்தனை நாள் தான் செஞ்ச தப்புக்கு எல்லாம் சரியான தண்டனை கிடைச்சுடுச்சுனு நினைச்சு திருந்தி வாழ ஆரம்பிச்சுச்சு அந்த நரி