The Stag, the Sheep, & the Wolf – ஆடு மலையாடு ஓநாய் : ஒரு மலையாடு ஒருநாள் கிராமத்து பக்கம் வந்துச்சு

அங்க ஒரு ஆட்டு கூட்டம் இருக்குறத பார்த்துச்சு ,அந்த ஆட்டு கூட்டம் நிறய கோதுமைகள சேமிச்சு வச்சிருந்துச்சுங்க
அத பார்த்த மலையாடு கொஞ்சம் கோதுமைய கடனா கேட்டுச்சு
அதுக்கு அந்த ஆடுகளோட தலைவன் மழைக்காலம் ஆரம்பிக்க போகுது அதனால நாங்க கோதுமை கொடுக்க முடியாதுனு சொல்லுச்சு

அதுக்கு அந்த மலையாடு சொல்லுச்சு எனக்கு ஓநாய் நண்பன் இருக்கான் ,எனக்கு கோதுமை கொடுக்கலைனா அவன்கிட்ட சொல்லி உங்கள வேட்டையாட சொல்லுவேன்னு மிரட்டுச்சு மலையாடு

அதைக்கேட்ட ஆடுகளோட தலைவன் ,நீ சொல்லலைனாலும் அந்த ஓநாய் என்னைக்காவது எங்களை வேட்டையாடத்தான் போகுது ,
அதே நேரத்துல நீ சொல்லியும் அந்த ஓநாய் எங்கள வேட்டையாடாம போகலாம்
அதனால நாங்க சேர்த்து வச்சிருக்க கோதுமையையும் சேர்த்து இழக்க விரும்பலனு சொல்லி மலையாட அங்க இருந்து தொரத்தி விட்டுடுச்சு
நீதி : யாசகம் பெற பணிவு தேவை