The Serpent & the Eagle – பாம்பும் கழுகும் :- ஒரு காட்டுக்குள்ள ஒரு பெரிய கழுகு இருந்துச்சு
அந்த கழுகு ஒருநாள் இறை தேடும்போது ஒரு பெரிய பாம்பு அத பிடிக்க பாத்துச்சு
கழுகோட கழுத்துல சுத்திகிட்ட பாம்பு கழுகு பறக்க முடியாத அளவுக்கு இறுக்குச்சு
கழுகு யாராவது காப்பாத்த வரமாட்டாங்களானு பார்த்துச்சு ,அப்ப ஒரு வேட்டைக்காரர் அந்த பக்கம் வந்தாரு
கழுக பாம்பு பிடிச்சிக்கிட்டு இருந்தத பார்த்த அவருக்கு ரொம்ப பாவமா போச்சு
அதனால அந்த பாம்ப தட்டி விட்டாரு ,அந்த நேரத்துல பாம்பு அவர கடிக்க பார்த்துச்சு ஆனா அதனால முடியல
உடனே அவரு வச்சிருந்த தண்ணி பாட்டில்ல தன்னோட விஷத்தை கக்கிடுச்சு ,இது அந்த வேட்டைக்காரருக்கு தெரியாது
வீட்டு நடந்து போய்கிட்டு இருந்த வேட்டைக்காரருக்கு ரொம்ப தண்ணி தவிச்சுச்சு ,உடனே அந்த தண்ணி பாட்டில்ல இருந்து தண்ணி குடிக்க போனாரு
ஆனா இது எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருந்த கழுகு பறந்து வந்து தண்ணிய தட்டி விட்டுச்சு
தன்னை காப்பாத்துன வேட்டைக்காரருக்கு திரும்ப நன்மை செய்த கழுகுக்கு அவர் திரும்பவும் நன்றி சொன்னாரு
நீதி : கருணைச் செயலுக்கு நல்ல பலன் கிடைக்கும்