முயல் எலி பூனை கதை The Rabbit, the Weasel & the Cat:- ஒரு கிராமத்துக்கு பக்கத்து காட்டுல ஒரு முயல் வீடுகட்டி வாழ்ந்துகிட்டு வந்துச்சு

ரொம்ப அழகா அந்த வீட்ட கட்டி வாழ்ந்துகிட்டு வந்த முயல் ஒருநாள் இரைதேடி வெளிய போச்சு
அந்த நேரம் அங்க ஒரு எலி வந்துச்சு , சுத்தமா இருந்த முயலோட வீட்ட அசுத்தம் செஞ்சுச்சு அந்த எலி
படுக்கை எல்லாம் கலைச்சி போட்டு ,அங்க இருந்த பொருளை எல்லாம் தட்டிவிட்டு அலங்கோலப்படுத்துச்சு அந்த இடத்த
வீட்டுக்கு திரும்பி வந்த முயல் எலி அங்க படுத்து கிடைக்கிறத பார்த்துச்சு
உடனே முயலுக்கு ரொம்ப கோபம் வந்துச்சு உடனே எலிய ஒரு அடி அடிச்சுச்சு

கோபமான எலியும் முயல அடிக்க ஆரம்பிச்சுச்சு
அப்ப அந்த பக்கமா ஒரு பூனை வந்துச்சு ,முயலும் எலியும் சண்ட போடுறத பார்த்துச்சு அந்த பூனை
புத்திசாலியான அந்த பூன நீங்க ரெண்டுபேரும் வெளியில வந்து இந்த பாறைக்கு பக்கத்துல உக்காருங்க உங்க பிரச்னையை நான் தீர்த்து வைக்குறேனு சொல்லுச்சு
உடனே பூனையும் எலியும் அங்க பூனை சொன்ன இடத்துல போய் உக்காந்துச்சுங்க
உண்மையாவே அந்த இடம் ரெண்டு பாறைகளுக்கு நடுவுல இருந்துச்சு ,அந்த இடத்துக்கு ஒரு பாதை மட்டுமே இருந்துச்சு
அந்த பாதையிலயும் பூனை நின்னுகிட்டு இருந்துச்சு

நல்லா இருந்த வீட்ட அசுத்தம்பண்ணுனதுக்கு எலிக்கு தண்டனைனு சொல்லி அத பிடிச்சி தின்னுடுச்சு பூனை
சின்ன விசயத்துக்கு தேவையில்லாத அடுத்தவங்க கிட்ட பஞ்சாயத்துக்கு போன முயலோட தப்புக்கு தண்டனைனு சொல்லி முயலையும் பிடிச்சி தின்னுடுச்சு

தேவையில்லாம சண்ட போட்ட முயலும் எலியும் வீனா செத்துப்போச்சுங்க
நீதி : ஊர் ரெண்டு பட்டாள் கூத்தாடிக்கு கொண்டாட்டம்