The Leap at Rhodes – முட்டாள் குரங்கும் புத்திசாலி நரியும்

The Leap at Rhodes – முட்டாள் குரங்கும் புத்திசாலி நரியும் :- ஒரு அடர்ந்த காட்டு பகுதியில நிறய காட்டு மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க

அதுங்க எல்லா எப்பவும் காட்டோட நடுப்பகுதியில் கூடி விளையாடுறது வழக்கம்

கொஞ்ச நாளா பக்கத்து காட்டுக்கு போயிருந்த ஒரு குரங்கு அன்னைக்கு அங்க வந்துச்சு

நான் பக்கத்துல இருக்குற ரோட்ஸ் காட்டுக்கு போயிருந்தான் அங்க நிறய மிருகங்கள் இருந்துச்சுங்க

அங்க இருந்த ஒரு பனைமரம் உயரத்துக்கு குதிச்சதுனால என்ன அவுங்களோட அரசரா ஏத்துக்கிட்டாங்க ,அதனால உங்கள எல்லாம் பார்த்து அந்த நல்ல விஷத்தை சொல்லிட்டு போகலாம்னு வந்தேனு சொல்லுச்சு

அதைக்கேட்ட எல்லா மிருகங்களும் ரொம்ப சந்தேக பட்டுச்சுங்க ,அது எப்படி பனைமரம் அளவுக்கு குதிக்க முடியும் ,யார் நீ குதிக்கிறத பார்த்தாணு நிறய கேள்விகள் கேட்டுச்சுங்க

அப்ப அங்க வந்த புத்திசாலி நரி இந்த காடு ரோட்ஸ் காடு இல்ல ,இருந்தாலும் இந்த காட்டையும் ரோட்ஸ் காடா நினைச்சுகிட்டு இப்ப குதி பார்ப்போம் எவ்வளவு தூரம் குதிக்கிறனு நாங்க எல்லாரும் பார்க்க ஆவலா இருக்கோம்னு சொல்லுச்சு

அத கேட்ட எல்லா மிருகங்களும் நரி சொன்ன மாதிரி குதிக்க சொல்லுச்சுங்க

தன்னோட பொய் பித்தலாட்டம் வெளிச்சத்துக்கு வந்துடுச்சுனு அங்க இருந்து ஓடி போய்டுச்சு அந்த குரங்கு