The Mighty Tiger And His Stripes-புலிக்கு வரிகள் வந்த கதை

The Mighty Tiger And His Stripes-புலிக்கு வரிகள் வந்த கதை :- முன்னொரு காலத்துல ஒரு புலி வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அதுக்கு அப்ப அதோட உடம்புல கருப்பு வரிகள் இல்லாம இருந்துச்சு , அந்த காலத்துல சிங்கம் மாதிரி பலம் இருந்தும் புலி நரி மாதிரி சுபாவத்தோட நடந்துகிட்டு இருந்துச்சு

ஒருநாள் அந்த காட்டுக்கு பக்கத்துல இருக்குற விவசாய நிலத்துல ஒரு விவசாயி தன்னோட காளை மாட்ட பயன்படுத்தி உளுதுகிட்டு இருந்தாரு

அத பார்த்த புலிக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு ,இது என்ன பலம் வாய்ந்த காட்டு மிருகமான காளை மாடு இப்படி ஒரு சாதாரண மனிதனுக்கு ஏன் வேலை செய்யுதுனு யோசிச்சுச்சு

அந்த விவசாயி அந்த பக்கம் போனதும் ,நேரா காளை மாட்டுகிட்டயே வந்து தன்னோட சந்தேகத்தை கேட்டுச்சு

அதுக்கு அந்த காளை மாடு சொல்லுச்சு ஒவ்வொரு விலங்குக்கு பிறவி குணங்கள் இருக்கு அத சிலர் புரிஞ்சிக்க ஆரம்பிச்சதும் அத பின்பற்ற ஆரம்பிச்சுடுவாங்க, காட்டு மிருகமா பிறந்த எனக்கு புல் கொடுத்து ,இருக்க இடம் கொடுத்த விவசாயி என்னோட பிறவு குணத்தை மாத்திட்டாரு அதனால நான் இப்படி வேலை செய்யுறேன்னு சொல்லுச்சு

புலிக்கு ஒண்ணுமே புரியல ,அப்ப அந்த காளை மாடு சொல்லுச்சு உனக்கு எவ்வளவோ பலம் இருந்தும் உனக்கு உணவுக்காக படைக்க பட்ட என்ன கொன்னு திங்காம இப்படி நரி மாதிரி பேசிகிட்டு இருக்க இதுல இருந்தே தெரியுது உன்னோடு பிறவு குணத்தை நீ இன்னும் தெரிஞ்சுக்கலைனு

உன்னோட பிறவி குணம் உனக்கு தெரிஞ்சதுனா சிங்க ராஜாவுக்கு அடுத்து நீதான் இருப்ப , உன்னோட பிறவி குணத்தை கண்டுபிடிச்சி அதுக்கு ஏத்த மாதிரி வாழுனு சொல்லுச்சு அந்த காளை மாடு

இத கேட்ட புலிக்கு ரொம்ப குழப்பமா போச்சு ,அது எப்படி என்னோட பிறவி குணத்தை கண்டுபிடிக்கிறதுனு யோசிச்சுச்சு ,அதுக்கு ஒண்ணுமே புரியல,அதனால அந்த விவசாயி கிட்டயே கேட்டு தெரிஞ்சிக்கிடலாம்னு அந்த விவசாயிய தேடி போச்சு

அந்த விவசாயி ஆடு மேச்சுகிட்டு இருந்தாரு ,அப்ப அங்க வந்த புலி ,நீங்கதான் அந்த காளை மாட்டோட பிறவி குணத்தை தெரிஞ்சுக்கிட்டு அத விவசாயத்துக்கு பயன்படுத்துறீங்க அதேமாதிரி நான் எப்படி என்னோட பிறவி குணத்தை தெரிஞ்சுக்கிடறதுனு கேட்டுச்சு

விவசாயிக்கு இப்ப குழப்பம் வந்துடுச்சு ,மிருகங்களையும் மனிதர்களையும் பார்த்தவுடனே அடிச்சு திங்குற அளவுக்கு பலம் வாய்ந்த இந்த புலிக்கு அதோட குணத்தை பத்தி சொல்லி கொடுத்தா இந்த புலி முதல்ல நம்மலத்தான் அடிச்சி திங்கும் ,இந்த புலி கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுனு யோசிச்சாறு

உடனே அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு , நீ அந்த காளை மாட்ட பாத்தியா அது கழுத்துல ஒரு கயிறு இருக்கும் ,அது வேலை முடிச்சதும் அத மரத்துல கட்டி வச்சிடுவேன் ,அதே மாதிரி உன்னையும் மரத்துல கட்டி வைக்குறேன் உனக்கு உன்னோட பிறவு குணம் வருதான்னு பாப்போம்னு சொன்னாரு

புலியும் மனிதர்களோட பிறவி குணமான தந்திரத்தை புரிஞ்சிக்காம ,விவசாயி சொன்னதுக்கு சரினு சொல்லுச்சு ,உடனே அந்த விவசாயி ஒரு பெரிய கயிற எடுத்துட்டு வந்து புலிய மரத்தோட கட்டி போட்டாரு

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா நிறய சுள்ளி குச்சிங்கள எடுத்துட்டு வந்து புலிக்கு அடியில போட்டு தீ வச்சாரு

ஆஹா மனிதர்களோடு குணம் இதுதானா ,தான் தப்பிக்கணும்னு உதவி கேட்டு வந்த என்னையே கொள்ள பாக்குறானே இந்த விவசாயினு கோபப்பட்டுச்சு ,அப்பதான் தன்னோட பிறவி பலத்தை பத்தி விவசாயியும் ,அந்த காளை மாடும் சொன்னது அதுக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு

அப்பத்தான் புலி தன்னோட முழு பலத்தையும் உபயோக படுத்த ஆரம்பிச்சுச்சு ,ஒரே இழு இழுத்து மரத்தை சாச்சிடுச்சு புலி , மரத்துல இருந்து தப்பிச்சாலும் , அத சுத்தி இருந்த கயிறு தீ பிடிச்சி எரிஞ்சிகிட்டே இருந்துச்சு ,உடனே ஓடிப்போயி தண்ணியில குதிச்சுச்சு

ஏற்கனவே தீல வெந்த புண்ணுல தண்ணி பட்டதும் அந்த இடம் எல்லாம் வரி வரியா காயங்கள் தெரிய ஆரம்பிச்சுச்சு ,கொஞ்ச நாள் கழிச்சு அந்த காயங்கள் குணமானாலும் கருப்பு வரிகள் அந்த புலிக்கு வந்துடுச்சு

புது வரிகளோட இருந்த புலி தன்னோட பலத்த அன்னைக்கு இருந்துதான் தெரிஞ்சுக்கிடுச்சு , நரி மாதிரி அடுத்த மிருகங்களோட தோன தோன்னு பேசுறத நிறுத்துச்சு ,தனக்கு தேவையான உணவ அதுவே வேட்டையாடி சாப்பிட ஆரம்பிச்சுச்சு

புது வரிகளோடவும் ,புது பலத்தோடவும் புலி உரு மாறினத பார்த்த காட்டு மிருகங்கள் சிங்கத்துக்கு அடுத்தபடியான இடத்துல புலிய வச்சதுங்க

அன்னைல இருந்து புலி கம்பீரமான காட்டு விலங்கா வாழ்ந்துகிட்டு வருது