The Lazy Bear and the Hardworking Ants – பாடம் கற்ற கரடி :-ஒரு காட்டுக்குள்ள ஒரு பெரிய கரடி இருந்துச்சு ,அந்த கரடி ரொம்ப சோம்பேறியா இருந்துச்சு
எப்ப பார்த்தாலும் சாப்டுட்டு தூங்குறதே வேலையா இருந்துச்சு
அது வாழ்ந்துகிட்டு இருந்த இடத்துக்கு பக்கத்துல ஒரு எறும்பு கூட்டம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு
கரடி சாப்பிடும்போது கீழ சிந்துர சின்ன உணவு துணுக்கு எல்லாத்தையும் அந்த எறும்பு கூட்டம் கொஞ்சம் சாப்பிட்டுட்டு மீதியை சேமிச்சு வைக்கும்
ஒருநாள் அந்த எறும்புங்களோட தலைவன் அந்த சோம்பேறி கரடிக்கு பாடம் புகட்ட நினைச்சுச்சு
அதனால எல்லா எறும்புகளையும் கூட்டிகிட்டு போயி தூங்கிகிட்டு இருந்த கரடிய சுத்தி நின்னுகிடுச்சு
ஒரு எறும்பு போயி கரடிய கடிக்க சொல்லுச்சு ,அந்த எறும்பும் தூக்கிகிட்டு இருந்த சோம்பேறி கரடிய கடிச்சுச்சு
வலி தாங்காம தூக்கத்துல இருந்த கரடிக்கு பகீருனு இருந்துச்சு ,என்ன இது எல்லா எறும்புகளும் என்ன சுத்தி நிக்குதுனு பயந்துச்சு
அப்பத்தான் அந்த எறும்புகளோட தலைவன் சொல்லுச்சு இன்னைக்கு எங்கள தாண்டி நீ வெளியில போக முடியாது ,உன்னோட பொந்துல இருந்து உணவ வேணும்னு சாப்டுக்கனு சொல்லுச்சு
ஆனா உணவு எதையும் சேர்த்து வைக்காத கரடிக்கு எதுவுமே அதோட பொந்துல இல்ல
எவ்வளவு கெஞ்சிக்கும் எறும்புகள் கரடிக்கு வழி விடல ,அதனால அன்னைக்கு முழுசும் பட்டினியா இருந்துச்சு கரடி
அன்னைக்கு சாயந்திரம் பசியில இருந்த கரடி கிட்ட அந்த எறும்பு தலைவன் சொல்லுச்சு ,இன்னைக்கு எங்களால நீ பட்டினி கிடந்ததுக்கு எங்களை மன்னிச்சுடு
ஆனா ஒரு விஷயம் புரிஞ்சிக்க இதே மாதிரி உன் இருப்பிடத்த விட்டு வெளிய போக முடியாத சூழல் வரலாம்
அதுக்கு நீ தயாரா இருக்கணும் அதுக்காகத்தான் நாங்க இப்படி செஞ்சோம் ,நீ சாப்பிடுற சாப்பாட்டுல இருந்து கீழ விழுகுற துணுக்குகள சாப்பிட்டுத்தான் நாங்க வாழுறோம் ,அந்த நன்றிக்காக தான் இப்படி நடந்துக்கிட்டோம்னு சொல்லி மன்னிப்பு கேட்டுச்சு
எறும்பு சொல்லி கொடுத்த பாடம் கரடிய நல்லபடியா மாத்திடுச்சு ,அன்னைல இருந்து தனக்கு தேவையான உணவ மட்டும் தேடாம ,சேமிச்சு வைக்கிறதுக்கும் சுறுசுறுப்பா உணவு தேடுச்சு அந்த கரடி
அப்படி அதுக்கு கிடைக்குற சாப்பாட்டை தான் உண்டது போக மீதிய சேமிச்சு வைக்க ஆரம்பிச்சுச்சு கரடி
மழைக்காலம் வந்து கரடி வெளிய போக முடியாத சூழல் வந்துச்சு அப்ப கூட அது சேமிச்சு வச்சிருந்த உணவு சாப்பிட்டுட்டு நல்லா இருந்துச்சு
உழைப்பு மற்றும் சேமிப்ப பத்தி தனக்கு நல்ல புத்தி சொன்ன எறும்பு தலைவனும்னு தினமும் நன்றி சொல்லுச்சு அந்த கரடி