The Horse’s Thought – குதிரையின் உணவு-Akbar Birbal Stories in Tamil

The Horse’s Thought – குதிரையின் உணவு-Akbar Birbal Stories in Tamil:-ஒருநாள் அக்பரும் பீர்பாலும் வேட்டைக்கு போனாங்க ,ரொம்ப நேரம் வேட்டையாடுன ரெண்டுபேருக்கும் நேரம் போனதே தெரியல

அக்பருக்கு ரொம்ப பசிக்க ஆரம்பிச்சது ,உடனே பக்கத்துல இருந்த வேட்டைக்காரங்க எல்லாரும் அக்பருக்கு உணவு எடுத்துட்டு வர ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பக்கம் ஓடுனாங்க

அக்பரும் பீர்பலும் மட்டும் தனியா இருந்தாங்க

அப்ப பீர்பால் தன்னோட உடைல வச்சிருந்த பாதம் பருப்ப எடுத்து அக்பருக்கு கொடுத்தாரு

அக்பரும் பீர்பலும் அங்க இருந்த குதிரைக்கு வச்சிருந்த புல்லு கட்டு மேல உக்காந்து தின்னு முடிச்சாங்க

அவுங்கள பாத்த குதிரை ரொம்ப சத்தமா கத்துச்சு ,

அக்பர் கேட்டாரு என்ன இது இந்த குதிரை இப்படி அளவுக்கு அதிகமா கத்துதுன்னு கேட்டாரு

அதுக்கு பீர்பால் சொன்னாரு நம்ம வாய் அசையிறத பார்த்து அதுக்கு வச்சிருந்த புள்ள திங்கிறோம்னு நினைச்சிடுச்சு போல அதான் கத்துதுன்னு சொன்னாரு

இத கேட்ட அக்பர் வாய் விட்டு சிரிச்சாரு ,பீர்பாலோட நகைச்சுவைய நினச்சு நினச்சு சிரிச்சாரு அக்பர்