பாடம் கற்ற மனநல மருத்துவர் – Doctor Story in Tamil

பாடம் கற்ற மனநல மருத்துவர் – Doctor Story in Tamil:-ஒரு ஊருல ஒரு மனநல காப்பகம் இருந்துச்சு ,ஒருநாள் அங்க இருந்த டாக்டரோட கார் டயர் பஞ்சராகிடுச்சு.

உடனே பக்கத்துல யாராவது ஸ்டெப்னி மாத்தி தருவங்களான்னு பாக்க போனாரு ,அவருக்கு உதவ யாருமே இல்ல

உடனே தானே டயர மாத்த ஆரம்பிச்சாரு ,பஞ்சரான டயர கழட்டிட்டு அடுத்த டயர மாத்தூரப்ப அத மாட்ட வச்சிருந்த நாலு போல்ட்டும் தவறி பக்கத்துல இருந்த சாக்கடைக்குள்ள போய்டுச்சு

அடடா இப்ப என்னபண்றதுன்னு யோசிச்சிகிட்டு இருந்தாரு அவரு,அப்ப அவரோட நோயாளி ஒருத்தர் காப்பகத்துக்குள்ள இருந்து வந்தாரு

இவரை எப்படியாவது சாக்கடைக்குள்ள இறங்க வச்சு அந்த போல்ட் எல்லாத்தையும் எடுத்துடலாம்னு நடந்தத எல்லாம் சொன்னாரு அவரு

அப்ப அவரு சொன்னாரு மத்த மூணு டயர்ல இருந்து ஒவ்வொரு போல்ட கழட்டி இந்த டயருக்கு மாத்துங்க ,இப்ப எல்லா டயரும் மூணு போல்டோட இருக்கும் கொஞ்சதூரத்துல ஒரு மெக்கானிக் இருக்காரு அவருகிட்ட போய் இன்னும் நாலு போல்ட் வாங்கி எல்லா டயருக்கும் மாட்டிக்கணு சொன்னாரு

அப்ப அந்த டாக்டர் கேட்டாரு இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க நீங்க எப்படி இங்க இருக்கீங்கன்னு கேட்டாரு

அதுக்கு அவரு சொன்னாரு நான் மனநலம் பதித்தவன்தான் ஆனா முட்டாள் கிடையாதுனு