Grasshopper and Ants Tamil Kids Story வெட்டுக்கிளியும் எறும்புகளும்

ஒரு வயல் பகுதியில் ஒரு எறம்புகூட்டம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அந்த எறும்புகள் எல்லாம் எப்பவும் சுறு சுறுப்பா இருக்கும்

தினமும் காலையில எந்திரிச்சு உணவுகளை தேடிப்போகும் அந்த எறும்புக்கூட்டம்

கிடைக்குற உணவுகளை பாதி சாப்டுட்டு மீதிய அதங்க வசிக்கிற வலையில் கொண்டு போயி சேமிச்சு வைக்குங்க அந்த எறும்புங்க

இத ஒரு நாள் ஒரு வெட்டுகிளிபாத்துச்சு

அப்ப ஒரு குட்டி எறும்பு ரொம்ப கஸ்டப்பட்டு ஒரு நெல் மணிய தூக்கிகிட்டு போரத பாத்துச்சு

ஏன் இவ்வளவு கஸ்டப்பட்டு உழைக்குறிங்க நமக்கு தேவையான உணவுதான் இங்க அதிகமா கிடைக்குதேனு கேட்டுச்சு

இதக்கேட்ட அந்த குட்டி எறும்பு சேமிச்சு வக்கிறது தான் நல்ல பழக்கம்ன எங்க தாத்தா எறும்பு சொல்லிருக்காரு அதனால நாங்க தினமும் உணவு சேமிச்சு வைக்கிறோம்ன சொல்லுச்சு

என்ன தான் இருந்தாலும் தினமும் கிடைக்கிற புதிய உணவு மாதிரிவருமா வா இங்க வந்துஉக்காருனு சொல்லுச்சு

உடனே அந்த எறும்பும் அந்த வெட்டுகிளிபக்கத்துல போயி உக்காந்துச்சு

இதப்பாத்த அந்த தாத்தா எறும்பு அட குட்டி எறும்பே இப்படி சோம்பேரித்தன படக்கூடாது உணவு தேடுரதும் அத சேமிச்சு வக்கிறதும்தான் நமக்கு நல்லதுனு சொல்லுச்சு

இதக்கேட்ட அந்த குட்டி எறும்பு உடனே எல்லா எறும்புகளோடயும் சேந்து உணவு தூக்கிட்டு போச்சு ஆனா அந்த வெட்டுகிளி உணவு ஏதும் சேமிக்காம தினமும் தனக்கு கிடைக்குறத சாப்டுட்டு சந்தோசமா இருந்துச்சு

சில நாட்களுக்கு பிறது மழை காலமும் அடுத்து குளிர் பனி காலமும் வந்துச்சு

அந்த வயல் பகுதியில் இருக்குற செடி எல்லாம் பனியால முடிடுச்சு

அப்பத்தான் அந்த வெட்டுகிளி அடடா நாமளும் அந்த எறும்பு மாதிரி உணவு சேமிச்சு வச்சிருந்தா நல்லா இருந்துருக்குமேனு கவலப்பட்டுச்சு

ரொம்பநாள் உணவு இல்லாம கஸ்டப்பட்ட அந்த வெட்டுகிளி பசியால் செத்துப்போச்சு

குழந்தைகளா உங்க பெற்றோர் சொல்படி கேட்டு சுருசுருப்பா இருந்தா மட்டும் போதாது உங்க தாத் தா பாட்டி கொடுக்குற காச உண்டியல்ல சேத்து வச்சிங்கன்ன உங்களுக்கு நல்லது