The Fisherman & the Little Fish – மீனவரும் குட்டி மீனும் :- ஒரு கிராமத்துல ஒரு மீனவர் வாழ்ந்துகிட்டு வந்தாரு

அவரு எப்பவும் பக்கத்தில இருக்குற ஆத்துல போயி மீன் பிடிச்சி ,அத சந்தையில வித்து வாழ்கை நடத்திக்கிட்டு வந்தாரு

ஒருநாள் ஆத்துக்கு மீன் பிடிக்க போன மீனவருக்கு எந்த மீனும் பிடிபடல
அதனால ரொம்ப சோகமா போய்ட்டாரு மீனவரு

அப்ப அவரோட தூண்டில்ல ஒரு குட்டி மீன் மாட்டுச்சு
அத பிடிச்சி கூடையில போடா போனாரு மீனவரு
அப்ப அந்த குட்டி மீன் சொல்லுச்சு மீனவரே மீனவரே நானே குட்டியா இருக்கேன் என்ன பிடிச்சி என்ன பண்ண போறீங்க

என்ன விட்டுடீங்கன்னா நான் வளர்ந்து பெரிய மீனா மாறிடுவேன் அப்ப என்ன பிடிச்சிக்கோங்கன்னு சொல்லுச்சு
அப்ப அந்த மீனவர் சொன்னாரு நான் முட்டாள் இல்ல , ஒரு மீனுமே சிக்கத்தப்ப நீ எனக்கு கிடைச்சிருக்கு ,நீ ரொம்ப பெரிய விஷயம் எனக்கு அதனால உன்ன விட மாட்டேன்னு சொல்லி கூடைக்குள்ள போட்டுட்டாரு

நீதி : ஒரு சிறிய ஆதாயம் ஒரு பெரிய வாக்குறுதியை விட மதிப்புமிக்கது