நல்ல நண்பன் கெட்ட நண்பன்- The Man & the Satyr

நல்ல நண்பன் கெட்ட நண்பன் The Man & the Satyr:- ஒரு ஊருல ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க

The Man & the Satyr

அதுல ஒருத்தர் நல்லவரவும் இன்னொருத்தர் கொஞ்சம் கெட்டவராவும் இருந்தாரு

அந்த நல்ல நண்பர் எப்பவும் ஞாயம் இருக்குற பக்கமே தன்னோட கருத்துக்கள சொல்லி பேசுவாரு

ஆனா அந்த கெட்ட நண்பர் நிலையான நிலைப்பாடு இல்லாம இடத்துக்கு ஏற்ப நல்லவங்களுக்காகவும் பேசுவாரு அதே நேரத்துல கெட்டவங்களுக்காகவும் பேசுவாரு

ஒருநாள் மழை பெஞ்சுகிட்டு இருந்துச்சு அப்ப அந்த கெட்ட நண்பர் தன்னோட கைகள் குளிராம இருக்க தன்னோட வாய் வழியா ஊதி சூடு பண்ணிக்கிட்டு இருந்தாரு

அத பார்த்த நல்ல நண்பர் ஒரு கப்புல சுட சுட டீ போட்டு கொண்டுவந்து கொடுத்தாரு

உடனே அந்த கெட்ட நண்பர் அத ஊதி ஆத்தி குடிச்சாரு

அப்பத்தான் அந்த நல்ல நண்பர் சொன்னாரு ஏற்பாடு ஒரே வாய் ஒரே மூச்சு காத்த வச்சு உன் கைகளை சூடு பண்ணவும் ,அதே நேரத்துல டீ ய குளிர வைக்கவும் முடியுதோ அதே மாதிரிதான் நீ இருக்கன்னு சொன்னாரு

ஒன்னும் புரியாம முழிச்சி அந்த கெட்ட நண்பர் கிட்ட சொன்னாரு ,நீ எப்போதும் ஒரே நிலைபாட்டுல இருக்கணும் அத விட்டுட்டு வெவ்வேறு பக்கம் பேச கூடாதுனு சொன்னாரு