THE EAGLE AND THE BEETLE – Birds Story in Tamil – கழுகும் வண்டும்:- ஒரு காட்டுக்குள்ள ஒரு முயல் நடந்து போய்கிட்டு இருந்துச்சு
அப்ப ஒரு கழுகு அத கொத்தி திங்க வந்துச்சு,கழக பார்த்ததும் முயல் ஓடி ஒளிஞ்சிகிடுச்சு
அப்ப அதோட வண்டு நண்பன் அங்க வந்துச்சு , உடனே முயல் தன்ன காப்பாத்த சொல்லி கேட்டுச்சு முயல்குட்டி
தைரிய சாலியான வண்டு கழுகுகிட்ட கேட்டுச்சு தயவு செஞ்சு என்னோட நண்பனை கொத்தாதீங்கனு
ஆனா கோபக்கார கழுகு வண்ட அங்குட்டு போக சொல்லுச்சு
மீண்டும் குறுக்க வந்த வண்ட ஒரே அடி அடிச்சு பள்ளத்துல உருட்டிவிட்டுடுச்சு
வண்டு சுதாரிச்சு எழுறதுக்கு முன்னாடி , அந்த முயல் குட்டிய கொத்தி தின்னுடுச்சு அந்த கழுகு
அத பார்த்த வண்டுக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு
நான் எவ்வளவு கெஞ்சி கேட்டும் என்னோட பேச்ச கேக்காம இப்படி என்னோட நண்பனை தின்ன உன்ன நிம்மதியா இருக்க விடமாட்டேனு சபதம் போட்டுச்சு வண்டு
அன்னைக்கு இருந்து கழுகு எங்க கூடு காட்டுதுனு பார்த்துகிட்டே இருந்துச்சு வண்டு
அந்த கூட்டுக்கு வந்து பார்த்துச்சு வண்டு ,அங்க கழுகு நிறய முட்ட போட்டு வச்சிருந்துச்சு
கழுகோடா முட்டைய எல்லாத்தையும் கீழ தள்ளி விட்டுச்சு அந்த வண்டு
கூட்டுக்கு திரும்பி வந்த கழுகுக்கு ஒரே அதிர்ச்சியா இருந்துச்சு , இருந்தாலும் மனச தேத்திகிட்டு மலை மேல கூடு கட்டுச்சு கழுகு
ஆனா வண்டு பெரு முயற்சி செஞ்சு மலைமேல ஏறி , கழுகோடா கூட்டுக்கு வந்துச்சு
அங்க திரும்பவும் கழுகு முட்ட இட்டு வச்சிருந்துச்சு , இப்பயும் அந்த முட்ட எல்லாத்தையும் தள்ளி விட்டுடுச்சு
திரும்ப முட்டை எல்லாம் உடைஞ்சத பார்த்த கழுகுக்கு ரொம்ப கோபம் வந்துச்சு
அதனால படைப்பு கடவுள் ஜுபிட்டரோட இடத்துக்கு வந்துச்சு கழுகு
அங்க அமைதியா உக்காந்திருந்தாரு ஜுபிட்டர் , உடனே ஒரு யோசனை வந்துச்சு கழுகுக்கு
அவரோட மடியிலேயே முட்டைகளை இட்டு வச்சுச்சு ஜுபிட்டர்
ஆனா அந்த வண்டு ஒரு பெரிய களிமண் உருண்டைய எடுத்துட்டு பறந்து வந்துச்சு
சரியா ஜூபிட்டரோட மடியில அந்த களிமண் உருண்டைய போட்டுச்சு
திடீர்னு ஏதோ விழுந்ததும் ,ஜூபிட்டர் ஒரு நிமிஷம் அதிர்ச்சி ஆனாரு
அப்ப அந்த முட்டைகள் எல்லாம் கீழ விழுந்து ஒடஞ்சிருச்சு
இத எல்லாம் பார்த்த ஜூபிட்டர் ரெண்டு பேரையும் கூப்பிட்டு சமாதானம் பண்ணுனாரு
ஆனா எவ்வளவு முயற்சி செஞ்சும் வண்டோட மனசு மாறவே இல்ல ,நான் எவ்வளவு கெஞ்சி கேட்டும் என் நண்பனை கொன்ன அந்த கழுக சும்மா விடமாட்டேனு சொல்லுச்சு
கழுகு சொல்லுச்சு எனக்கு உணவா படைக்கு பட்ட உணவ நான் சாப்பிட கூடாதா , ஏன் இப்படி என்னோட முட்டைகளை இப்படி உடைக்குதுனு கேட்டுச்சு கழுகு
கொஞ்சம் குழப்பத்துல இருந்த ஜூபிட்டர் ஒரு முடிவு செஞ்சாரு ,இனிமே வண்டு வர்ற சீசன்ல கழுகு முட்ட போடாது , கழுகு முட்ட போடுற காலத்துல வண்டு பறக்காதுனு இயற்கை காலகட்டத்த மாத்தி வச்சாரு ஜூபிட்டர் கடவுள் ,அதனால அந்த பிரச்னை தீர்வுக்கு வந்துச்சு