The Astrologer – குட்டையில் விழுந்த ஜோஸ்யக்காரர் :- ஒரு கிராமத்துல ஒரு ஜோசியக்காரர் இருந்தாரு

அவரு எப்பவும் வானத்துல இருக்குற நட்சத்திரங்களை கணக்கு பண்ணிகிட்டே இருப்பாரு
வானத்துல இருக்குற நட்சத்திரங்களை வச்சு நடக்கப்போற விஷயங்களை சொல்லலாம்னு நம்புனாரு அவரு

ஒருநாள் அவரு வானத்தை பார்த்துகிட்டே நடந்துகிட்டு இருந்தாரு
அப்ப ஒரு புது நட்சத்திரம் வானத்துல இருக்குறத பார்த்தாரு
உடனே கணக்கு போட்ட ஜோசியர் இந்த உலகம் அழியப்போகுதுனு ஜோசியம் சொல்லிகிட்டே நடக்க ஆரம்பிச்சாரு
அப்ப கால் தவறி பக்கத்துல இருக்குற குளத்துக்குள்ள விழுந்துட்டாரு

அத பார்த்த கிராமத்து காரங்க ஓடி வந்து அவர தூக்கி என்ன நடந்துச்சுனு கேட்டாங்க
புது நட்சத்திரத்தை பத்தியும் தன்னோட ஜோசியத்த பத்தியும் சொன்னாரு ஜோஸ்யக்காரர் ,
இத கேட்ட எல்லாரும் சிரிச்சிகிட்டே சொன்னாங்க முதல்ல உங்கள பத்தி யோசிங்க அதுக்கு அப்புறமா உலகத்த பத்தி ஜோசியம் பாக்கலாம்னு சொன்னாங்க
நீதி : ஜோசியம் அடுத்தவருக்கு மட்டுமே