கழுதையின் மூளை-THE ASS’S BRAIN Tamil Animal Story :- ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்துச்சு ,அதுக்கு தொனயா ஒரு நரியும் இருந்துச்சு ,சிங்கம் சாப்பிட்டு மிச்சம் வைக்கிறத சாப்பிட்டே உயிர் வாழ்ந்துச்சு அந்த நரி.

ஒருநாள் அந்த சிங்கத்துக்கு ரொம்ப சோம்பேறித்தனமான இருந்துச்சு ,ஆனா அதுக்கு பசிக்கவும் செஞ்சுச்சு ,

வேட்டைக்கு போக விருப்பம் இல்லாத நரி எப்படி பசியை போக்குறதுனு நரி கிட்ட யோசன கேட்டுச்சு
அதுக்கு அந்த நரி சொல்லுச்சு ,இந்த காட்டுல புத்தி இல்லாத மிருகங்கள் நிறைய இருக்கு அதுல ஒன்ன இங்கயே கொட்டிட்டு வர்றேன் அத கடிச்சு கொன்னுடுங்க நாம இங்கயே சாப்டுட்டு நிம்மதியா இருக்கலாம்னு சொல்லுச்சு அந்த நரி

நல்ல யோசனனைனு சொல்லிட்டு ,உடனே வெளியில போயி ஏதாவது மிருகத்த கூட்டிட்டு வர சொல்லுச்சு சிங்கம்

கொஞ்சம் தூரம் போன நரி கண்ணுல ஒரு கழுத்த பட்டுச்சு ,உடனே அதுகிட்ட போன நரி கழுதையரே கழுதையரே உங்களுக்கு சிங்க ராஜாவ தெரியுமான்னு கேட்டுச்சு,

அதுக்கு அந்த கழுதையும் ஆமா தெரியுமேனு சொல்லுச்சு ,அதுக்கு நரி சொல்லுச்சு அவருக்கு நண்பர்கள் யாருமே இல்லயாம் அதனால உங்கள அவர் நண்பரா சேர்த்துக்க கூட்டிட்டு வர சொன்னாருன்னு சொல்லுச்சு
அடடா ராஜ நட்பானு நினச்ச கழுத , முன்ன பின்ன யோசிக்காம நரி கூட சேர்ந்து சிங்கத்த பாக்க போச்சு

வெளியில போன நரிக்கு காத்துட்டு இருந்த சிங்கம் கழுதையோட வற்ற நரிய பாத்து மெதுவா பதுங்கி நின்னுச்சு ,குகைக்குள்ள கழுத்த வந்ததும் ஒரே அடியா அடிச்சு அத கொன்னுடுச்சு

அதுக்கு அப்புறமா நரி கிட்ட சொல்லுச்சு ,நரியாரே நமக்கு சுலபமா இன்னைக்கு இறை கிடைச்சுடுச்சு ,ஆனா எனக்கு இன்னும் சோம்பேறித்தனமா இருக்கு அதனால நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு வர்றேன்

அதுவரைக்கு இந்த கழுதைய நீ காவல் கத்துக்கிட்டு இரு ,என்ன விட்டுட்டு எதையாவது சாப்பிட நினச்சா உன்னையும் கொன்னுடுவேன்னு சொல்லிட்டு தூங்க போச்சு

ரொம்ப நேரம் ஆகியும் சிங்கம் வராததால கழுதையோட மூளைய எடுத்து தின்னுடுச்சு நரி,

தூக்கத்துல இருந்து எழுந்து வந்த சிங்கம் ,கழுத்தியோட மூளை இல்லாதத பாத்து ரொம்ப கோபப்பட்டுச்சு
நரியாரே நான் அவ்வளவு சொல்லியும் எனக்கு தெரியாம கழுதையோட மூளைய தின்னது ஏன்னு கேட்டுச்சு சிங்கம்

அதுக்கு நரி சொல்லுச்சு ,இந்த கழுதைக்குத்தான் மூளையே இல்லையே ,மூளை இருந்திருந்தா மாமிச உண்ணியான நான் கூப்பிட்டு வேட்டையாடி மாமிசம் திங்கிற உங்களோட நட்ப்பு வச்சுகிட இங்க வருமான்னு கேட்டுச்சு

அட ஆமாம்லனு சொல்லிட்டு , கழுதைய நரிகூட சேர்ந்து கடிச்சி திங்க ஆரம்பிச்சது ,
அந்த நரி மாதிரி புத்தி கூர்மையா இருந்தா பலசாலியான சிங்கத்த கூட ஏமாத்திடலாம் போல