காலம் பொன் போன்றது – TIME IS PRECIOUS

காலம் பொன் போன்றது – TIME IS PRECIOUS Moral Story in Tamil :- விக்கினு ஒரு பையன் இருந்தான்,அவன் எப்பவும் சுறுசுறுப்பு இல்லாம நேரத்த வீணடிச்சுகிட்டே இருப்பான்.

ஒருநாள் தன்னோட நண்பர்களோட சேர்ந்து பிக்னிக் போனான் ,அங்க போயும் தன்னோட போன நோண்டிகிட்டு நேரத்த வீணடிச்சான்

அங்க இருந்த அவனோட நண்பர்கள் ,நண்பா நமக்கு இந்த சுற்றுலா தளத்துல நிறைய நேரம் சந்தோசமா இருக்க கிடைச்சிருக்கு அத ஏன் வீணடிக்குறன்னு கேட்டாங்க

அத கண்டுக்காம தன்னோட போனயே நோண்டிக்கிட்டு இருந்தான் விக்கி ,உடனே எல்லாரும் வா நாம மலை மேல ஏறி சூரிய அஸ்தமனத்த பாக்கலாம்னு சொன்னாங்க

வேண்டா வெறுப்பை விக்கியும் அவுங்களோட கிளம்பி போனான் ,

மத்த எல்லாரும் தங்களுக்கு கிடைச்ச நேரத்த இயற்கைய ரசிச்சுகிட்டே மலை மேல உற்சாகமா ஏறுனாங்க

ஆனா விக்கி மட்டும் போன நோண்டிகிட்டே மெதுவா மலை ஏறுனான் ,அவன் மலைக்கு போய் சேருறப்ப சரியா சூரியன் மறைஞ்சிடுச்சு

ஆனா சூரிய கதிர்களோட அந்த மலையோட இயற்கை காட்சி அவனுக்கு ரொம்ப சந்தோசத்தை கொடுத்துச்சு ,அவனோட நண்பர்கள் ரொம்ப நேரமா சூரியன் மரையிறத பாத்து ரசிச்சிகிட்டு இருந்தாங்க

அடடா நண்பர்கள் சொன்ன மாதிரி நேரத்த வீணடிக்காம இங்க வந்திருந்தா ரொம்ப நேரம் சூரிய அஸ்தமனத்த கண்டு ரசிச்சிருக்கலாமேன்னு கவலைப்பட்டான் அப்பத்தான் அவனுக்கு

புரிஞ்சது நேரம் பொன் போன்றதுன்னு