The Ass Carrying the Image – அடிவாங்கிய கழுதை :- ஒருநாள் கிராமத்துல திருவிழா நடந்துச்சு

பழைய சம்பிரதாயப்படி கழுதை பூட்டுன வண்டியில சாமி ஊர்வலம் போச்சு
ராஜவீதியில எல்லா மக்களும் ஓரமா நின்னு சாமி கும்பிட்டாங்க
அத பார்த்த கழுத எல்லாரும் தனக்குத்தான் மரியாத கொடுக்கிறதா நினைச்சிகிடுச்சு
அதனால் அதுக்கு ரொம்ப கர்வம் வந்திடுச்சு ,உடனே தற்பெருமையில பாட்டு பாட ஆரம்பிச்சுச்சு கழுத

கழுத கனைக்கிறத கேட்டதும் வண்டிக்காரர் ஓங்கி ஒரு அடி அடிச்சாரு
அப்பதான் அந்த முட்டாள் கழுதைக்கு புரிஞ்சது இந்த ஊர் மரியாத தனக்கு இல்லைனு
நீதி :மற்றவர்களுக்குச் வர வேண்டிய மரியாதையை நீங்களே எடுத்துக் கொள்ள முயற்சிக்காதீர்கள்