Sleeping Beauty Story in Tamil – தூங்கும் அழகி கதை :-ஒரு காலத்துல ஒரு மிக பெரிய ராஜாங்கம் இருந்துச்சு

அந்த நாட்ட ஒரு அரசன் ஆண்டுகிட்டு வந்தான் , அந்த அரசருக்கும் அவரோட ராணிக்கு குழந்தையே இல்லை

தங்களுக்கு குழந்தை வேணும்னு கடவுள்கிட்ட வேண்டிகிட்டே இருந்தாங்க அவுங்க ரெண்டுபேரும்
அவுங்களோட பிரார்த்தனைக்கு பலனா அவுங்களுக்கு ஒரு பெண் குழந்தை பொறந்துச்சு

அந்த குழந்தை ரொம்ப அழகா இருந்துச்சு ,உடனே இந்த நாட்டுல இருக்குற தேவதைகள் எல்லாரையும் குழந்தைய பார்க்க விருந்துக்கு கூப்பிட்டாரு அரசர்

ஆனா கருப்பு தேவதைய மட்டும் கூப்பிடாம விட்டுட்டாரு , அதனால அந்த கருப்பு தேவதைக்கு ரொம்ப கோபம் வந்திடுச்சு
விருந்து நடக்குற அன்னைக்கு எல்லா தேவதைகளும் வந்து குழந்தைய வாழ்த்த ஆரம்பிச்சாங்க ,அப்ப அங்க வந்த கருப்பு தேவதை ரொம்ப சத்தம் போட ஆரம்பிச்சுச்சு
என்ன மதிக்காத உங்களுக்கு தண்டனையா இந்த குழந்தை 16 வயசு வரைக்கும் தான் வாழும் ,அப்புறம் கூரான பொருள் பட்டு விழுந்துடுவானு சாபம் கொடுத்துச்சு
இத கேட்ட எல்லாரு ரொம்ப திகைச்சு போய்ட்டாங்க ,உடனே அந்த கருப்பு தேவதை மறைஞ்சிடுச்சு

அங்க இருந்த இன்னொரு தேவதை சொல்லுச்சு ,அந்த கருப்பு தேவதை செஞ்சது ரொம்ப தப்பு ,அதனால நாங்க ஒரு வரம் உங்களுக்கு கொடுக்குறோம்
கூரான பொருட்கள் எதுவும் அவகிட்ட இல்லாத மாதிரி பாத்துக்கோங்க ,அப்படி கூரான ஆயுதம் அவ மேல பட்டாலும் அவ மரணமாகுறதுக்கு பதிலா நீண்ட தூக்கத்துக்கு போய்டுவா

அப்படி தூங்குற அவளை மாவீரனான இளவரசன் ஒருத்தன் வந்து தொட்டானா அவ எழுந்திருச்சு பழையபடி ஆகிடுவானு சொன்னாங்க
அன்னைல இருந்து இளவரசிய எல்லாரும் ரொம்ப பாதுகாப்பா பாத்துக்கிட்டாங்க
கூரான ஆயுதம் கூரான பொருட்கள் அவகிட்ட இருந்து எடுத்துட்டு போய்ட்டாங்க ,

இளவரசிக்கு 16 வயசு ஆகிடுச்சு ,ஒருநாள் அந்த அரண்மனையோட மாடில ஏதோ சத்தம் வந்துச்சு ,
என்னனு பார்க்க அங்க போனா அந்த இளவரசி ,அங்க ஒரு கிழவி ஒரு சக்கரத்தை சுத்திகிட்டு இருந்தா ,அதுக்கு காரணம் கேட்டா இளவரசி

அதுக்கு அங்க கிழவி தனக்கு முதல்ல உதவி செய்ய சொன்னா ,உடனே இளவரசி சரினு சொன்னா ,உடனே பக்கத்துல இருக்குற ஊசியை எடுக்க சொன்னா கிழவி

உடனே இளவரசி அந்த ஊசிய எடுக்க போனா அப்ப அந்த ஊசி அவ கைல பட்டு மயக்கமாகி கீழ விழுந்துட்டா

அரண்மனைல இருக்குற எல்லாரும் ரொம்ப கவலையா ஆகிட்டாங்க,அன்னைல இருந்து அந்த இளவரசி தூங்கிகிட்டே இருந்தா

ஆனா தேவதைகள் சொன்ன மாதிரி இளவரசன் வரவே இல்லை , உடனே அரசர் மீண்டும் அந்த தேவதைங்களை கூப்பிட்டு உதவி கேட்டாரு

அப்ப அந்த தேவதைங்க சொல்லுச்சு ,இளவரசன் வர இன்னும் நூறு வருஷம் ஆகும் அதனால உங்க எல்லாரையும் நாங்க தூங்க வச்சிடுறோம் அப்பத்தான் இளவரசன் வந்ததும் எல்லாரும் எந்திரிக்கலாம்னு சொன்னாங்க

உடனே அந்த தேவதைகள் ஒரு மந்திரத்தை சொன்னாங்க ,உடனே அங்க இருந்த எல்லாரும் மயக்கம் போட்டு தூங்க ஆரம்பிச்சுட்டாங்க

அந்த அரண்மனையே தூசி படிஞ்சி போச்சு,அங்க மக்கள் வர்றதையே நிறுத்திட்டாங்க

தேவதைகள் சொன்ன மாதிரி நூறு வருசத்துக்கு அப்புறமா,ஒரு இளவரசன் அங்க வந்தான் , அவன அந்த அரண்மனைக்கு போக வேணாம்னு எல்லாரும் சொன்னாங்க

ஆனா துணிச்சலான அந்த இளவரசர் தைரியமா அதுக்குள்ள போனான் ,உள்ள போய் பார்த்த அவனுக்கு ஆச்சர்யமா இருந்துச்சு
ஒரு அழகான இளவரசி தூக்கிகிட்டு இருக்குறத பார்த்தான் இளவரசன் ,உடனே அவள தொட்டான் இளவரசன்

தேவதைகள் சொன்ன மாதிரி அந்த இளவரசி தூக்கத்துல இருந்து எழுந்திருச்சா ,அதுக்கு அப்புறமா தூக்கத்துல இருந்த அரசர் ,காவலாளர்னு அந்த அரண்மனைல இருந்த எல்லாரும் எழுந்திரிச்சாங்க

தங்களோட இளவரசியை காப்பாத்துன அந்த இளவரசனுக்கே இளவரிசைய கல்யாணம் பண்ணி வச்சு ,தன்னுடைய ராஜாங்கத்தையும் அவனுக்கே கொடுத்தாரு அரசர்