முல்லாவின் பறக்கும் கழுதை -Nasruddin’s Flying Donkey :- ஒரு நாள் முல்லா தன்னோட தோட்டத்துல படுத்துகிட்டு வானத்தை வெடிக்க பார்த்துகிட்டு இருந்தாரு

அப்ப ஒரு கழுகு வேகமா பறந்து போச்சு அதே நேரத்துல வீட்டுக்கு பின்னாடி கட்டி வச்சிருந்த ,அத பார்த்ததும் முல்லாவுக்கு ஒரு திடீர் யோசனை வந்துச்சு , நம்ம ஏன் நம்ம கழுதைக்கு பறக்க சொல்லி கொடுக்க கூடாதுனு யோசனை வந்துச்சு.

கழுதைக்கு ரெக்க இல்லைனு தெரிஞ்சும் முல்லாவுக்கு ஏன் முயற்சி செஞ்சு பாக்க கூடாதுனு தோணுச்சு , அப்படி கழுதைக்கு பறக்க சொல்லி கொடுத்துட்டா இனி நாம் எங்க போகணும்னாலும் பறந்தே போகலாம்னு நினைச்சாரு

மறுநாள் காலையிலேயே எழுந்திருச்சி கழுதையை குளிப்பாட்டி ,அதுக்கு நிறய சாப்பாடு போட்ட முல்லா இன்னைல இருந்து உனக்கு பறக்க சொல்லி கொடுக்க போறேன்னு சொன்னாரு,அந்த கழுதை ஒன்னும் புரியாம முழிச்சிச்சு

மெதுவா அது முன்னாடி ஒரு விமானதோட படத்தையும் , பொம்மையையும் காமிச்சு இதுங்க கூட பறவைகள் கிடையாது ஆனா எவ்வளவு நல்லா பறக்குது தெரியுமா ,நீயும் முயற்சி செஞ்சா நல்லா பறக்கலாம்னு சொன்னாரு

தினமும் பறவைகளை காமிச்சு அப்படி பிறக்கணும் ,இப்படி பறக்கணும்னு கழுதைக்கு சொல்லி தரேன்னு சொல்லி அத பாடா படுத்துனாரு

கடைசியா ஒருநாள் இன்னைக்கு நான் சொல்லி கொடுத்தத எல்லாம் சோதிச்சு பாக்க போறேன்னு சொல்லிட்டு , கழுதையை கூட்டிகிட்டு மலை உச்சிக்கு போனாரு ,விளிம்புல நின்னுகிட்டு ம்ம்ம் பறனு சொல்லி கழுதையை தள்ளி விட்ட அடுத்த நொடி கழுத பள்ளத்தாக்கில் விழுந்து கால உடைச்சிகிடுச்சு

அத பார்த்த முல்லாவுக்கு அப்பதான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்துச்சு ,அடடா நல்லா தான் பறந்துச்சு சரியா எறங்கத்தான் தெரியல ,தினமும் பறக்க சொல்லி கொடுத்த நாம் எப்படி சுலபமா தரையிறங்குறதுனு சொல்லி கொடுக்காம விட்டுட்டமேன்னு வருத்தப்பட்டாரு

நேரா கழுதை கிட்ட வந்த முல்லா கவல படாதா நீ சூப்பரா பறந்த எப்படி தரையிறங்குறதுனு இனிமே நான் உனக்கு சொல்லி தாரேன்னு சொன்னாரு ,

அத கேட்ட கழுதை ஒடஞ்ச காலோட தத்தி தத்தி காட்டுக்குள்ள ஓடி போயி ஒளிஞ்சிகிடுச்சு
