Mulla and the Goat – குளிக்காத முல்லா கதை :- முல்லா ஒரு கிராமத்துல வசிச்சிகிட்டு வந்தாரு

அப்ப அந்த ஊருல மழை காலம் தொடங்குச்சு ,தினமும் மழை பெஞ்சதால அந்த ஊரே ரொம்ப குளிர்ச்சியா இருந்துச்சு ,அதனால முல்லாவுக்கு அடிக்கடி சளி பிடிச்சுச்சு,இது காரணமா குளிக்கவே ரொம்ப பயந்தாரு முல்லா

இன்னைக்கு ஒருநாள் குளிக்கலேனா ஒன்னும் ஆகிடாதுனு நினைச்ச முல்லா ரெண்டு நாளா குளிக்காம இருந்தாரு ,மூணாவது நாள் அவரோட உடம்புல இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பிச்சிடுச்சு

சரி வெண்ணி வச்சாவது இன்னைக்கு குளிக்கலாம்னு வெளியில போயி நெருப்பு மூட்ட பாத்தாரு ,ஆனா முதல் நாள் பெஞ்ச மழை காரணமா நெருப்பு வைக்க வச்சிருந்த விறகு எல்லாம் நனைஞ்சு போயி இருந்துச்சு

உடனே முல்லா நாளைக்கு குளிச்சிக்கிடலாம்னு இருந்துட்டாரு இப்படியே ஒரு வரமா குளிக்காம இருந்த முல்லா ஒரு நாள் டீ குடிக்க டீ கடைக்கு போனாரு , டீ வாங்கிட்டு பக்கத்துல இருந்த பெஞ்ச்ல போயி உக்காந்தாரு ,அங்க முல்லாவோட பக்கத்து வீட்டு காரர் உக்காந்து டீ குடிச்சிகிட்டு இருந்தாரு , அட என்ன முல்லா இவ்வளவு துர்நாற்றம் வீசுது, என் வீட்டு ஆடு கூட இவ்வளவு துர்நாற்றம் வீசாதுனு சொன்னாரு

இத கேட்ட முல்லா கோபப்பட்டாரு ,அந்த ஆள ஒரே அடி அடிச்சு கீழ தள்ளி விட்டுட்டாரு ,இத பார்த்த எல்லாரும் ரொம்ப பயந்து போயிட்டாங்க ,கீழ விழுந்தவன தூக்கி விட்டு ரெண்டு பேரையும் சமாதான படுத்துனாங்க

ஆனா கோபக்காரனானபக்கத்து வீட்டுக்காரர் அது எப்படி ,முல்லா பேசிகிட்டு இருக்கும்போதே என்ன அடிக்கலாம்னு கோபப்பட்டு ,பஞ்சாயத்து தலைவர்கிட்ட போயி புகார் கொடுத்தாரு

இத கேட்ட பஞ்சாயத்து தலைவர் ,முல்லாவ கூட்டிகிட்டு வர சொல்லி ஆள் அனுப்புச்சாறு ,அங்க வந்த முல்லா கிட்ட என்ன விஷயம் எதுக்கு இவர அடிசீங்கனு கேட்டாரு ,உடனே முல்லா நடந்த எல்லாத்தையும் சொன்னாரு

இத கேட்ட பஞ்சாயத்து தலைவர் ,என்ன செய்யுறதுனு யோசிச்சாறு ,அப்பத்தான் முல்லா சொன்னாரு வேணும்னு அந்த ஆட்ட கூட்டிகிட்டு வந்து சோதிச்சு பாருங்க ரெண்டு பேருல யாரு அதிகமா நாத்தமடிக்கிறானு நீங்களே தெரிஞ்சுப்பீங்கனு சொன்னாரு

உடனே அந்த பக்கத்து வீட்டுக்காரர் தன்னோட தோட்டத்துக்கு போயி அவரோட துர்நாற்றம் பிடிச்ச ஆட்ட இழுத்துகிட்டு வந்தாரு ,அந்த ஆடு பலநாள் குளிக்காம கெட்ட வாடை அடிச்சிச்சு

அந்த ஆட்டு பக்கத்துல போன பஞ்சாயத்து தலைவர் ஆட்டோட வாடை தாங்க முடியாம மயங்கி கீழ விழுந்துட்டாரு ,இத பார்த்த எல்லாரும் சிரிச்சிட்டாங்க ,அவரை தண்ணி தெளிச்சு எழுப்பி விட்டாங்க

இத விட முல்லா ஒன்னும் கெட்ட வாடை அடிக்க மாட்டாருனு நினைச்ச பஞ்சாயத்து தலைவர் அந்த ஆட்ட கையில பிடிச்சிக்கிட்டே முல்லா கிட்ட போனாரு , அப்ப அடிச்ச கேட்ட வாடையில பஞ்சாயத்து தலைவரும் அந்த ஆடும் சேர்ந்து மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க

இத பார்த்த அங்க இருந்த எல்லாரும் ஒரு பக்கம் சிரிப்பும் இன்னொருபக்கம் அதிர்ச்சியும் அடைஞ்சாங்க ,அவ்வளவு கேவலமான வாடையை முல்லாமேல அடிக்குதுனு எல்லாரும் நினைச்சாங்க ,இனி முல்லா இருக்குற பக்கமே போகக்கூடாதுனு முடிவு செஞ்சாங்க

- அறிவில் சிறந்த முல்லா கதைகள்ல வர்ற இந்த நகைசுவை கதை குழைந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி கொடுக்க எழுதப்பட்டது
- அதனால குழந்தைகளே எப்பவும் சுத்தமாவும் சுகாதாரமாவும் இருக்குறது நமக்கு மட்டும் இல்ல நம்ம சுத்தி இருக்குறவங்க மூக்குக்கும் ரொம்ப நல்லது
Super 👌 👍
Super story sir