Mulla’s Bribe – லஞ்சம் கொடுத்த முல்லா : முல்லா ஒருநாள் தன்னோட வீட்டுல இருந்தப்ப ஒரு நண்பர் வந்தாரு

அவரு முல்லாவ பார்த்து முல்லா பக்கத்து ஊருல திருவிழா நடக்குது அங்க போயி நாம் ரெண்டு பேரும் பொரி கடை போடலாம்ணு கேட்டாரு

முல்லாவும் அதுக்கு சரினு சொன்னாரு ,உடனே அந்த நண்பர் சொன்னாரு ,அந்த திருவிழா 10 வருசத்துக்கு ஒருதடவ தான் நடக்குது ,அதனால் போலீஸ் அதிகாரிங்க முன்பாதி செஞ்சவங்க மட்டும்தான் கடை நடத்தணும்னு அறிவிச்சு இருக்காங்கனு சொன்னாரு

உடனே முல்லா அதனால என்ன நாம இன்னைக்கே அங்க போயி முன்பதிவு செஞ்சிடலாம்னு சொன்னாரு ,அதுக்கு அந்த நண்பர் சொன்னது ,செஞ்சிடலாம் அதுக்கு நீங்க நம்ம ஊர் நீதிபதி கிட்ட தடையில்லா சான்று வாங்கணும்னு சொன்னாரு

அதுக்கு முல்லா கேட்டாரு அது என்ன தடையில்லா சான்றுனு கேட்டாரு அதுக்கு நண்பர் சொன்னாரு அது ஒன்னும் இல்லை முல்லா ,நீங்க நல்லவர் , நீங்க ரொம்ப நாளா இங்கதான் குடியிருக்கீங்க ,உங்களால திருவிழாவுல எதுவும் அசம்பாவிதம் நடக்குதுன்னு ஒரு ஒப்புதல் அவ்வளவுதான்னு சொன்னாரு

உடனே தன்னோட குடும்ப அட்டையை எடுத்துக்கிட்டு நீதிபதி ஆஃபீஸிக்கு போனாரு ,அங்க போனதும் அந்த தடையில்லா சான்று வேணும்னு அங்க இருந்த வேலையாள் கிட்ட சொன்னாரு

உள்ள போயி நீதிபதி கிட்ட பேசுன வேலையாள் திரும்பி வந்து ,நீதிபதிக்கு எதாவது உபயோகமா பரிசு கொண்டு வந்தீங்களானு கேட்டாரு

அப்பதான் முல்லாவுக்கு புரிஞ்சது இவுங்க நம்மகிட்ட லஞ்சம் கேக்குறாங்கனு ,நேர்மையான மனசு உடைய முல்லாவுக்கு லஞ்சம் கொடுக்க மனசு இல்ல ,வருத்தத்தோட வீட்டுக்கு திரும்ப வந்த முல்லா ,நேர்மையற்ற நீதிபதிக்கு பாடம் புகட்ட நினைச்சாரு அதனால் ஒரு பெரிய கண்ணாடி ஜாடிய எடுத்தாரு ,அதுல முக்கால் வாசி மணலை நிரப்புனாரு ,அதுமேல கொஞ்சம் தேன நிரப்புனாரு

அது பாக்குறதுக்கு முழு ஜாடி தேன் மாதிரி தெரிஞ்சிச்சு ,அத எடுத்துட்டு போய் நீதிபதி வேலையாள் கிட்ட கொடுத்தாரு ,அத வாங்கிகிட்டு வேலையாள் , முல்லாவோட குடும்ப அட்டைய வாங்கிட்டு போயி நீதிபதிகிட்ட கொடுத்தாரு ,உடனே அந்த நேர்மையற்ற நீதிபதி முல்லா கேட்ட தடையில்லா சான்றிதழை கொடுத்தாரு

அத வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டாரு முல்லா , ரெண்டுநாள் கழிச்சு அந்த தேன் பாட்டில தொறந்து பார்த்த நீதிபதிக்கு அதிர்ச்சி ,அதுல மணல் தான் இருந்துச்சு ,உடனே கோபமான நீதிபதி தன்னோட வேலையால கூப்பிட்டு இங்க பாரு நம்மள அந்த கிழவன் ஏமாத்திட்டான்னு சொன்னாரு

அதுக்கு அந்த வேலையாள் சொன்னான் நான் வேணும்னா முல்லா வீட்டுக்கு போயி அந்த தடையில்லா சான்றிதழை புடிங்கிட்டு வந்திடவான்னு கேட்டாரு ,யோசிச்சு பார்த்த நீதிபதி அப்படி செஞ்சா ஊர்க்காரங்க எல்லாம் நம்ம கிட்ட சண்டைக்கு வந்துடுவாங்க ,அதனால் சான்றிதல்ல சின்ன பிழை இருக்குனு சொல்லி அத வாங்கிட்டு வா , அந்த கிழவன திரும்ப வர வச்சி ஒரு கை பார்க்கலாம்னு சொன்னாரு

இத கேட்ட வேலையாள் நேரா முல்லாவோட வீட்டுக்கு போனாரு ,அங்க உக்காந்து இருந்த முல்லா கிட்ட அந்த சான்றிதழை தர சொல்லி கேட்டாரு ,எல்லா விஷயமும் தெரிஞ்ச முல்லா என்னோட சான்றிதழ்ல அந்த பிரச்னையும் இல்ல ,ஆனா அத கொடுத்த நீதிபதிக்கு தான் பிரச்னை ,அத அவர் மனசாட்சி கிட்ட கேட்க சொல்லுன்னு சொல்லி அத வந்து என்கிட்ட கேக்க வேணாம்னு சொல்லுன்னு சொன்னாரு

அத அப்படியே நீதிபதி கிட்ட போய் சொன்னாரு ,அப்பத்தான் தன்னோட தவற உணர்ந்தார் அந்த நீதிபதி