முட்டாள் முல்லா -Mulla and the Sacks of Wheat

முட்டாள் முல்லா -Mulla and the Sacks of Wheat:- முல்லாவுக்கு ஒரு நாள் உடம்பு சரி இல்லாம போச்சு ,அதுக்கு பக்கத்து வைத்தியர்கிட்ட போயி வைத்தியம் பாத்தாரு முல்லா

Mulla Gets Sick and Visits the Doctor

நிறைய மருந்து கொடுத்த வைத்தியர் முல்லா ஒரு மாசம் நல்லா ஓய்வு எடுக்கணும் ,எந்த வேலைக்கும் போக கூடாதுனு சொன்னாரு அந்த வைத்தியர் ,ஆனா முல்லா தினமும் சந்தைக்கு போயி வியாபாரம் செஞ்சு அதுல தான் வாழ்ந்துகிட்டு வந்தாரு ,

Doctor Advises Rest

அப்பத்தான் முல்லாவுக்கு புரிஞ்சது அடடா நமக்கு தேவையான பொருளையும் ,தானியத்தையும் சேர்த்து வைக்காம விட்டுட்டமே ,இந்த மாதிரி சூழ்நிலையில அது ரொம்ப கை கொடுத்து இருக்கும் ,எப்ப வேலைக்கு போகாம எப்படி ஒரு மாசம் சமாளிக்கிறதுனு வருத்தப்பட்டாரு

Mulla Realizes He Didn't Stock Up

ஒருநாள் அவரு வீட்டுல வச்சிருந்த உணவு பொருள் எல்லாம் தீர்ந்து போச்சு ,அப்ப குறுக்கு வழியில யோசிச்ச முல்லா தன்னோட கழுதையா கூட்டிகிட்டு பக்கத்து வயலுக்கு போயி ஒரு மூட்ட அரிசி அறுவடை செஞ்சு தன்னோட கழுதை முதுகுல ஏத்திக்கிட்டு வீட்டுக்குவந்து சமைச்சி சாப்பிட்டாரு

Food Runs Out, Mulla Steals Rice with Donkey

ஒரு வாரம் கழிச்சி அதே மாதிரி அரிசி திருடும்போது அந்த தோட்டத்து காவல் காரன் அவர புடிச்சி பஞ்சாயத்து தலைவர் கிட்ட கொண்டுபோய் நிறுத்துனாங்க.

Mulla Gets Caught Stealing Again

அடடா இப்படி திருட்டுதனம் செஞ்சு மாட்டிக்கிட்டமேன்னு வருத்தப்பட்ட முல்லா இந்த விசயத்துல இருந்து எப்படி தப்பிக்கிறதுனு யோசிச்சாறு ,அப்பதான் அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு

Mulla Regrets and Gets an Idea

பஞ்சாயத்து தலைவர் கேட்டாரு ஏன் இப்படி திருட்டுத்தனம் செஞ்சீங்கன்னு ,உடனே முல்லா சொன்னாரு எனக்கு ரொம்ப வயசாகிடுச்சு அதனால புத்தி பேதலிச்சிடுச்சு , நான் கிட்டத்தட்ட முட்டாளாவே மாறிட்டேனு சொன்னாரு

Leader Asks Why He Stole, Mulla Claims He's Almost a Fool

அத கேட்ட பஞ்சாயத்து தலைவர் சொன்னாரு கிட்டத்தட்டனா எவ்வளவுன்னு கேட்டாரு ,அதுக்கு முல்லா சொன்னாரு 90 விழுக்காடு நான் பைத்தியமா மாறிட்டேனு சொன்னாரு

Leader Asks How Much 'Almost', Mulla Says 90% Mad

தொடர்ந்து சொன்னாரு அதனாலதான் யாரோட தோட்டம் ,யாரோட கழுதைன்னு எனக்கு புரியவே இல்ல , அதான் என்னோட தோட்டம்னு நினைச்சு அடுத்தவங்க தோட்டத்துல அரிசிய அறுவடை செஞ்சு என்னோட கழுதை மேல ஏத்திக்கிட்டு இருந்தேன்னு சொன்னாரு ,

Mulla Explains He Confused the Fields and Donkeys

இத கேட்ட பஞ்சாயத்து தலைவர் கேட்டாரு அப்படி நீங்க பைத்தியமா இருந்தா உங்க தோட்டத்துல இருக்குற அரிசிய அறுவடை செஞ்சு அடுத்தவங்க கழுத மேல ஏத்தி இருக்கணும்ல ,அதுமாதிரி எதுவும் நடந்ததா தெரியலையேன்னு கேட்டாரு

Leader Points Out the Inconsistency in Madness

முல்லா சிரிச்சிகிட்டே சொன்னாரு அதான் எனக்கு 10 விழுக்காடு நல்ல புத்தி இருக்கே ,அது ஏமாளியா என்னோட பொருள அடுத்தவங்களுக்கு கொடுக்குறது இல்லைனு சொன்னாரு

 Mulla Smiles and Explains the 10% Sane Part

இத கேட்ட பஞ்சாயத்து தலைவருக்கு என்ன சொல்லி பஞ்சாயத்த முடிக்குறதுனே தெரியல ,இந்த முல்லா புத்திசாலி இவருகிட்ட போட்டா போட்டி போடமுடியாதுனு அந்த திருட்டு கொடுத்த தோட்டத்து காரரே வீட்டுக்கு போய்ட்டாரு

Leader Is Confused, Garden Owner Leaves