கருமியும் கல்லும்

ஒரு கருமி ஒருத்தன் ஒரு ஊருல வாழ்ந்துகிட்டு வந்தான்

தன்னோட சொந்த செலவுக்கு கூட காசு செலவு பண்ண மாட்டான் அந்த கருமி

தான் சம்பாதிச்ச பணத்தை எல்லாம் தங்க நாணயங்கலா மாத்தி

தோட்டத்துல இருக்குற கல்லுங்களுக்கு அடியில புதைத்தது வைத்தான் அந்த கருமி

தினமும் அந்த தங்க காசுங்கள எடுத்து எடுத்து பாத்து சந்தோசப்பட்டுக்குவான் அந்த கருமி

ஒரு நான் ஒரு திருடன் அந்த கருமிசெய்ரத பாத்தான் மறுநாள் அந்த தங்க கசுங்க எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டான் அந்த திருடன்

மறுநாள் தன்னோட தங்க காசு எல்லாத்தையும் காணாம போனத பாத்த அந்த கருமி ரொம்ப வறுத்த பட்டான்

ஊருக்கே கேக்குறமாதிரி சத்தமா அழுதான்

அந்த சத்தத்த கேட்ட அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க வேகமா ஓடிவந்து என்னனு பாத்தாங்க

இவ்வளவு முக்கியமான பொருள நீ ஏன் வீட்டுல பத்திரமா வைக்காம இப்படி தோட்டத்துல பொதச்சன்னு கேட்டாங்க

வீட்டுல இருந்தா எனக்காக அத செலவு பண்ணிடுவேன் அதான் தோட்டத்துல பொதச்சேன்னு சொன்னான்

அத கேட்ட ஒரு முதியவர் ஒரு கள்ள எடுத்து அவன்கிட்ட கொடுத்தாரு

என்னனு புரியாத கருமி இது எதுக்குன்னு கேட்டான்

செலவு செய்ய கூடாத செல்வமும் கல்லும் ஒண்ணுதான் இனிமே இத நீ தங்கமா நினச்சு

தினமும் எடுத்து எடுத்து பாருன்னு சொன்னாரு

உடனே கருமி வெட்க பட்டு தலைகுனிஞ்சான்