அந்தப் பணம் போதும் காமராஜர் கதை

அவரது உணவு மற்றும் இதரச் செலவுகளுக்காக அவருக்கு மாதம்தோறும் ரூபாய் 120 மட்டுமே அனுப்பி வந்தார் காமராஜர்

இவ்வளவுதானா” என்று முகத்தைச் சுழிக்காமல், அந்தப் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தினார் சிவகாமி அம்மையார்

ஆனால், ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு அந்தப் பணம் போதவில்லை. இன்னும் சிறிதளவு பணத்தை அதிகமாக விரும்பிய அவர், அந்த விருப்பத்தை காமராஜரின் நண்பர் தனுஷ்கோடி என்பவரின் மூலமாக

சென்னையிலிருக்கும் காமராஜருக்குத் தெரியப் படுத்தினார்.

மகனே காமாட்சி நீ மந்திரியா இருப்பதால் இங்கு என்னைப் பார்க்க யார் யாரெல்லாமோ வருகிறார்கள் என்னிடம் பேசுகிறார்கள். பலர் வேறு என்னென்ன பாஷைகள் எல்லாமோ பேசுகிறார்கள். அவர்கள் பேசுவதெல்லாம் எனக்குப் புரிவதில்லை. இருந்தாலும் வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பது நம் கடமை அல்லவா? நீ அனுப்புகின்ற 120 ரூபாய் பணத்தில் மிச்சம் பிடித்து அவர்களுக்கு ஒரு சோடா கலர் கூட வாங்கிக் கொடுக்க முடியவில்லை. ஆகவே அடுத்த மாதத்தி லிருந்து 30 ரூபாய் சேர்த்து 150 ரூபாயாக அனுப்பு

தனுஷ்கோடியின் மூலம் இந்தச் செய்தியை அறிந்த காமராஜருக்குக் கோபம் வந்துவிட்டது

இதோ பார் தனுஷ்கோடி! வீட்டிற்கு எத்தனையோ பேர் வரத்தான் செய்வார்கள். வருகின்ற அனை வருக்குமே சோடா கலர் வாங்கிக் கொடுத்து உபசரிப்பது என்பது இயலாத காரியம். வருகின்றவர்களும் சோடா கலர் கொடுத்து உபசரிப்பார்கள் என்ற எண்ணத்தோடு வருவதில்லை . தவிர, இந்த வயதான காலத்தில் அம்மா ஒய்வெடுக்காமல் பணத்தைச் சேர்த்து கோயில் குளம் என்று ஊர் ஊராகப் புறப்பட்டு விடுவார். இது அவரது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஆகவே அவரது மாதச் செலவுக்கு 120 ரூபாயே போதும்” என்று கூறி 3 ரூபாய் அதிகமாகக் கொடுக்கக் கண்டிப்பாக மறுத்துவிட்டார்

மக்களின் தலைவர் என்றால் வரைப் போல் அல்லவா இருக்க வேண்டும்