சாக்ரடீஸ் கட்டிய புது வீடு

நல்ல நண்பர்கள் இல்லையே!

கிரேக்கத் தத்துவஞானி சாக்ரடீஸ் ஒரு புது வீடு கட்டி அதில் குடியேறினார். வீட்டைப் பார்வையிட அவரது நண்பர்கள் சிலர்

வந்திருந்தனர்

என்ன வீடு கட்டியிருக்கிறீர், ஒரு எலி பொந்து போல?” என்றார் ஒரு நண்பர்.

“வீடு எப்படி இருந்தாலும் முகப்பு பார்ப்போரைக் கவரும் வண்ணம், “பளிச் சென்று அழகாக இருக்க வேண்டும். இது என்ன அழகோ? உங்களுக்கு அழகை ரசிக்கும் ரசனை கிடையாதா?” என்றார் இன்னொரு தண்பர்

ஒரு சிறு கூடம். ஒரே ஒரு அறை. ஒரு சமையல் அறை. இப்படியா வீடு கட்டுவது? ஒரு பெரிய கூடம் மூன்று நான்கு அறைகள் காற்றோட்டமும் வெளிச்சமும் அமைந்த விஸ்தாரமான சமையல் அறை முன்னே ஜட்கா வண்டி வந்து நிற்க இடம். பின்புறம் அழகிய தோட்டம். கிணறு. இப்படியல்லவா இருக்க வேண்டும் ஒரு வீடு என்று சொன்னார் வேறொரு நண்பர்.

நான்கைந்து விருந்தாளிகள் ஒரே சமயத்தில் வந்து விட்டால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான். ஒருவர் மேல் ஒருவர் படுத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் பாதிப்பேர் தெருவில் வந்துதான் படுத்துக் கொள்ள வேண்டும்.

எந்த யோசனையின் அடிப் படையில் இந்த வீட்டைக் கட்டினீரோ தெரியவில்லை என்று குறைபட்டுக் கொண்டார் இன்னொரு நண்பர்

சொல்லும் குறைகளை எல்லாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த சாக்ரடீஸ் இறுதியில், ”வீடு சகல வசதிகளுடன் பெரிதாக இல்லையே என்பது உங்கள் கவலை. ஆனால் என்னு டைய இப்போதைய கவலை என்ன தெரியுமா? இந்த சிறிய அறை கொள்ளுகிற அளவுக்காவது எனக்கு நல்ல நண்பர்கள் இல்லையே! இனிமேலாவது அமைவார்களா என்பதுதான் ” என்றார்.

அவர்கள் இதைக் கேட்டபின், அவரது வீட்டைக் குறை சொன்ன அத்தனை நண்பர்களின் முகங்களும் தொங்கிப் போயின

1 thought on “சாக்ரடீஸ் கட்டிய புது வீடு”

Comments are closed.