Mulla and the Slap – முல்லா வாங்கிய அடி :-முல்லா வாழ்ந்துகிட்டு வந்த கிராமத்துல இருந்த கோட்டைக்கு புதுசா ஒரு காவல் அதிகாரி வந்தாரு

அவரு ஒரு பெரிய கோபக்காரருன்னு எல்லாரும் சொன்னாங்க ,எதுக்கெடுத்தாலும் கோபப்படுற அவனால நமக்கு பிரச்சனை வராம இருக்கணும்னு அவரு இருக்குற பக்கமே யாரும் போகாம இருந்தாங்க
ஆனா ஒருநாள் தன்னோட கழுதையோட அந்த பக்கம் போனாரு முல்லா ,சரியா அந்த அதிகாரி வீட்டுக்கு முன்னாடி போறப்ப கழுதை சாணி போட்டுச்சு ,அத பார்த்த காவல் அதிகாரி வீட்டுக்குள்ள இருந்து வேகமா வந்து முல்லாவோட கன்னத்துல அடிச்சிட்டாரு

இத பார்த்த எல்லாருக்கும் அதிர்ச்சியா ஆகிடுச்சு ,அப்பதான் முல்லா கத்த ஆரம்பிச்சாரு ,கழுதை தரையிலதான் சாணி போட்டுச்சு உன் தலையிலயா போட்டுச்சுனு சொல்லி அந்த காவல் அதிகரிக்கிட்ட சண்டைக்கு போனாரு ,அந்த அதிகாரியும் சரிக்கு சமமா சண்டைபோட ,பக்கத்துல இருந்த எல்லாரும் வந்து அவுங்கள சமாதானப்படுத்தி அனுப்புச்சு வச்சாங்க

வீட்டுக்கு வந்த முல்லாவுக்கு மனசே ஆறலை அது எப்படி அந்த அதிகாரி என்னோட கன்னத்துல அடிக்கலாம் அவனை சும்மா விடக்கூடாது ,ஊர் பஞ்சாயத்து தலைவர் கிட்ட சொல்லி அவனை தண்டிக்காம விட கூடாதுனு முடிவு செஞ்சாரு

மறுநாள் காலையிலேயே பஞ்சாயத்துக்கு போயி அங்க இருந்த தலைவர்கிட்ட நடந்த சொன்னாரு முல்லா ,அத கேட்ட பஞ்சாயத்து தலைவர் முல்லா கொடுத்த புகார் கடிதத்தை தன்னோட வேலை ஆள்கிட்ட கொடுத்து அந்த காவல் அதிகாரிய பஞ்சாயத்துக்கு வரசொன்னாரு

கொஞ்ச நேரத்துல அங்க வந்த காவல் அதிகாரி முல்லாவ பார்த்ததும் சத்தம் போட ஆரம்பிச்சுட்டாரு ,இந்த கிறுக்கன்தான் என்மேல புகார் கொடுத்ததானு கத்துனாரு ,இத கேட்ட முல்லா ,பாத்திங்களா இந்த பைத்தியக்காரன இவனைத்தான் இங்க காவல் அதிகாரியா நியமிச்சு இருக்காங்கனு சொன்னாரு

ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கத்துனத பார்த்த பஞ்சாயத்து தலைவர் ரெண்டு பேரையும் சமாதான படுத்துனாரு ,அதுக்கு அப்புறமா நடந்தது எல்லாத்தையும் அக்கம் பக்கத்துல இருந்தவங்க எல்லாத்தையும் கூப்பிட்டு விசாரிச்சாரு
தீவிர விசாரணைக்கு அப்புறமா ஒரு முடிவுக்கு வந்த பஞ்சாயத்து அதிகாரி தன்னோட தீர்ப்ப சொன்னாரு , அந்த காவல் அதிகாரி முல்லாவுக்கு ஒரு தங்க காசு அபாரதமா கொடுக்கணும்னு தீர்ப்பு சொன்னாரு

இத கேட்ட முல்லாவுக்கு திருப்தி இல்லைனாலும் சரினு ஒத்துக்கிட்டாரு ,என்கிட்ட இப்ப தங்க காசு இல்ல நான் வீட்டுக்குபோயி எடுத்துட்டு வந்த அபராதத்தை கொடுக்குறேனு சொன்னாரு அந்த காவல் அதிகாரி ,பஞ்சாயத்து தலைவர் சரினு சொன்னதும் வேகமா வீட்டுக்கு போனாரு காவல் அதிகாரி
கோபக்காரரான அவருக்கு அபராதம் கட்ட மனசு இல்ல அதனால திரும்ப பஞ்சாயத்துக்கு போகாம வீட்டுலயே இருந்துகிட்டாரு ,அவரு வருவருனு காத்திருந்த முல்லாவுக்கு கோபம் பொங்கி வழிஞ்சிச்சு

ஒரு மணி நேரம் ஆகியும் அந்த காவல் அதிகாரி திரும்பி வராதத பார்த்த முல்லா கோபத்தோட உச்சத்துக்கு போயி பஞ்சாயத்து தலைவர் கன்னத்துல ஓங்கி ஒரு அடி அடிச்சாரு ,இத பார்த்த எல்லாரும் ஒரு நிமிசம் திடுக்கிட்டு போனாங்க

அப்பத்தான் முல்லா சொன்னாரு அந்த காவல் அதிகாரி திரும்ப வந்து எனக்கு கொடுக்க வேண்டிய அபராத தங்கக்காசை கொடுத்தாருன்னா ,அத இந்த பஞ்சாயத்து தலைவருக்கு கொடுத்துடுங்க
கன்னத்துல அடிச்சா அதுக்கு அபராதம் தங்க காசு தான ,இப்ப நான் இவரை அடிச்சுட்டேன் அதுக்கு அபராதமா அந்த தங்க காச வச்சிக்கிட சொல்லுங்கன்னு சொல்லிட்டு வந்துட்டாரு