எது நிரந்தரம் அக்பர் பீர்பால் சிறுகதை – Akbar Birbal Short Story

எது நிரந்தரம் அக்பர் பீர்பால் சிறுகதை – Akbar Birbal Short Story:அக்பர் ஒருநாள் அரண்மனையின் மாளிகை மடியில் இருந்து வெளிப்புறத்தை பார்த்து கொண்டு இருந்தார்

எது நிரந்தரம் அக்பர் பீர்பால் சிறுகதை - Akbar Birbal Short Story

அப்போது அரண்மனை வாசல் பகுதியில் உள்ள திண்ணையில் பிச்சைக்காரர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பதை கண்டார்

எது நிரந்தரம் அக்பர் பீர்பால் சிறுகதை - Akbar Birbal Short Story

அவர்களை கண்ட அக்பருக்கு கோபம் கோபமாக வந்தது இது என்ன உழைக்காமல் பிச்சை எடுக்கும் இவர்களது தொந்தரவு தாங்க முடியவில்லை ,எங்கோ உணவு அருந்திவிட்டு தினமும் இங்கு வந்து அமர்ந்து மக்களுக்கும் எனக்கும் தொந்தரவு கொடுக்கிறார்களே என்று கோபம் கொண்டார்

மறுநாள் அரண்மனை சுவற்றிலும் ,திண்ணையிலும் யாரும் அமர கூடாது என்று அறிவிப்பு அங்கு ஒட்டப்பட்டது

எது நிரந்தரம் அக்பர் பீர்பால் சிறுகதை - Akbar Birbal Short Story

இதை பார்த்த பிச்சைக்காரர்கள் நாங்கள் கஷ்டபட்டு பிச்சை எடுத்தாலும் எங்களுக்கு உண்டு உறங்க இடம் இல்லாததால் இங்கு அமர்ந்து சிறிது ஓய்வு எடுக்கிறோம் இதையும் தற்போது அரசர் தடை போட்டு விட்டாரே என்று வருந்தினார்

இதற்க்கு தீர்வு காண பீர்பால் அவர்களால் மட்டுமே முடியும் என்பதை அறிந்த அவர்கள் பீர்பாலிடம் சென்று முறையிட்டனர்

எது நிரந்தரம் அக்பர் பீர்பால் சிறுகதை - Akbar Birbal Short Story

அவர்களின் குறையை கேட்ட பீர்பால் ,அவர்களுக்கு உதவி செய்வதாக கூறினார்

மறுநாள் பிச்சை காரர்கள் போன்று உடை உடுத்து அரண்மனை திண்ணையில் சென்று அமர்ந்தார்

எது நிரந்தரம் அக்பர் பீர்பால் சிறுகதை - Akbar Birbal Short Story

மாடியில் இருந்து அவரை கண்ட அரசருக்கு மிகவும் கோபமாக வந்தது ,நாம் அமர கூடாது என்று அறிவிப்பு ஆணை ஒட்டிய பிறகும் இங்கு ஒருவர் வந்து அமர்ந்துள்ளது எதற்க்காக என்று அரண்மனை காவலர்களை அழைத்து கேட்டார்

எது நிரந்தரம் அக்பர் பீர்பால் சிறுகதை - Akbar Birbal Short Story

உடனே அரண்மனை காவலர்கள் பீர்பாலிடம் வந்து அவரை விசாரித்தனர்

இது யாருடைய அரண்மனையோ அவர் வந்து சொன்னால் தான் இங்கிருந்து செல்வேன் என்று சொன்னார் மாறுவேடத்தில் இருந்த பீர்பால்

இந்த செய்தியை அரசரிடம் கூறினார்கள் அரண்மனை காவலர்கள் ,இதை கேட்ட அரசருக்கு கோபத்துடன் சந்தேகம் வந்தது

எது நிரந்தரம் அக்பர் பீர்பால் சிறுகதை - Akbar Birbal Short Story

அது யார் அது அரச கட்டளையை மீறுவதோடு அல்லாமல் தன்னை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்தது என காண அவரே நேரில் வந்தார்

எது நிரந்தரம் அக்பர் பீர்பால் சிறுகதை - Akbar Birbal Short Story

அவரை பார்த்ததும் இது யாருடைய அரண்மனை என கேட்டார்

இது என்னுடைய அரண்மனை என கூறினார் அக்பர் ,எதற்கு முன்பு இது யாருடைய அரண்மனை என கேட்டார் பீர்பால்

இதற்க்கு முன்னர் எனது தந்தையின் அரண்மனை இது என கூறினார் அக்பர் ,அதற்க்கு முன்னர் இது யாருடைய அரண்மனை என கேட்டார் பீர்பால்

அதற்க்கு முன்னர் என்னுடைய தாத்தாவின் அரண்மனை இது என கூறினார் அக்பர் ,மாறுவேடத்தில் இருந்த பீர்பால் நேற்று ,இன்று நாளை என ஒவ்வொருவர் வசம் மாறி வரும் இந்த அரண்மனையை போல இந்த உலகில் நிரந்தரமானது எதுவும் இல்லை

எது நிரந்தரம் அக்பர் பீர்பால் சிறுகதை - Akbar Birbal Short Story

எனவே அதனை பாதுகாக்க மற்றவர் அதனை பயன்படுத்துவதை தடுப்பதில் என்ன நோக்கம் இருக்கிறது என கேட்டார் பீர்பால்

அவரது பேச்சில் மனம் மாறிய அரசர் இத்தகைய நிரந்தரமின்மை என்ற புத்திமதியை எனக்கு வழங்கிய நீங்கள் மிகப்பெரிய மகானாக இருக்க வேண்டும் உன்மையை சொல்லுங்கள் நீங்கள் யார் என கேட்டார் அக்பர்

எது நிரந்தரம் அக்பர் பீர்பால் சிறுகதை - Akbar Birbal Short Story

அப்போது தனது மாறு வேதத்தையும் தாடியையும் கழட்டிய பீர்பால் அரசே உங்களுக்கு புத்திசொல்ல இந்த அடியவனுக்கு தகுதி உள்ளதா என தெரியவில்லை இருந்த போதிலும் உண்மையை உங்களிடம் சொல்லவே இந்த மாறுவேடத்தை அணிந்தேன் ,என்னை மன்னியுங்கள் என்று கூறினார்

எது நிரந்தரம் அக்பர் பீர்பால் சிறுகதை - Akbar Birbal Short Story

தனக்கு நல்ல புத்தி கூறிய பீர்பாலை புகழ்த அக்பர் அவரை கட்டி அனைத்து தனது நன்றியை தெரிவித்தார்