The new lion King புது சிங்க ராஜா குழந்தைகள் கதை:-முன்னாடி ஒரு காலத்துல ஒரு மிகப்பெரிய காடு இருந்துச்சு அந்த காட்ட ஒரு பெரிய சிங்கராஜா ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு அவருக்கு ரொம்ப வயசாய்க்கிட்டே வந்ததுனால ஓடியாடி வேட்டையாட முடியல வனவிலங்குகளை கட்டுக்குள் வச்சு ஆட்சி செய்யவும் முடியல.

அப்பத்தான் அந்த சிங்கராஜா ஒரு முடிவெடுத்தாரு நாம வயசாகுற வரைக்கும் நல்லபடியா இந்த காட்ட ஆட்சி செஞ்சு முடிச்சாச்சு நமக்கு அடுத்ததா நம்ம மகனுக்கு இந்த காட்ட ஆட்சி செய்யுறதுக்கு வாய்ப்பு கொடுத்தே ஆகணும் நம்ம இருக்கும் போதே அவன் நல்லபடியா ஆட்சி செய்யுறத பார்த்துட்டோம்னா நம்ம நிம்மதியா ஓய்வு எடுக்கலாம் அப்படின்னு முடிவு செஞ்சாரு

தன்னோட மகன பார்க்கிறதுக்காக காட்டுக்குள்ள போய்கிட்டு இருந்தாரு பெரிய சிங்கராஜா அப்பத்தான் ஒரு மான ஆக்ரோஷமா ஓடி வேட்டையாடிக்கிட்டு இருந்துச்சு அந்த குட்டி சிங்கம் அதை கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்த பெரிய சிங்கத்துக்கு புரிஞ்சி போச்சு நம்ம மகன் அவசர காரனா இருக்கான் அதோட எதற்கெடுத்தாலும் கோபப்படுறான் இவனுக்கு பொறுமையும் நிதானமும் எப்ப வருதோ அப்பதான் இவன அரசரா ஆக்க முடியும் அப்படின்னு நினைச்சாரு. அதுக்கு என்ன செய்யலாம் அப்படின்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போது அவருக்கு ஒரு யோசனை வந்துடுச்சு

உடனே அவரோட மகனை கூப்பிட்டு அனுப்பிச்சாரு குட்டி சிங்கம் அங்க வந்ததும் அது கிட்ட சொன்னாரு நீ எனக்கு அடுத்து இந்த காட்ட ஆட்சி செய்யணும்னு விருப்பப்பட்டா நான் சொல்லுற அரசாங்க வேலையை நீ செஞ்சு முடிக்கணும் நம்ம காட்டுக்கு பக்கத்துல மஞ்சள் காடுன்னு ஒன்னு இருக்கு அந்த காட்டுக்கு போயி அங்க இருக்கிற மஞ்சள் பூவை எனக்காக நீ கொண்டு வரணும் ,

அப்படி போகுறப்ப வழியில யார் யாரெல்லாம் சந்திக்கிற,அவுங்களோட நிலைமை என்ன ,அவுங்களோட பிரச்னையை உன்னால தீர்த்து வைக்க முடியுமா அப்படின்னு எனக்கு இந்த டைரியில குறிப்பு எழுதிக் கொண்டு வரணும் அப்படின்னு சொல்லி ஒரு பெரிய டைரியையும் கொடுத்தாரு .

இதைக் கேட்ட குட்டி சிங்கம் இது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது நானே போயி அந்த பூவ உங்களுக்காக கொண்டு வரேன்,எனக்கு துணைக்கு யாரையும் அனுப்ப வேண்டாம் நானே வழி கண்டுபிடிச்சி போய்ட்டு வரேன் அப்படின்னு சொல்லிட்டு அங்க இருந்து வேகமா கிளம்பி போச்சு

மறுநாள் காலையில காட்டு வழியா அந்த சிங்கம் நடந்து போயிட்டு இருக்குறப்ப ஒரு ஆத்தோரத்துல ஒரு கரடி சோகமா உட்கார்ந்து இருக்கிறத பார்த்துச்சு உடனே அந்த கரடி கிட்ட ஏன் கரடியாரே இவ்வளவு சோகமா ஒக்காந்து இருக்கீங்க அப்படின்னு குட்டி சிங்கம்

அதுக்கு அந்த பெரிய கரடி இல்ல மழை காலம் முடிஞ்சு வெயில் காலம் வரப்போகுது இந்த நீர்நிலைகள் எல்லாம் வத்திடும் அதுக்கப்புறம் எங்களுக்கு மீன் கிடைக்காது நான் பட்டினி இருந்தாலும் பரவாயில்லை என்னோட குழந்தைகளும் பட்டினியா இருக்குமே அதை நினைச்சு வருத்தப்படுகிறேன் அப்படின்னு சொல்லுச்சு, இதை தன்னுடைய டைரியில விலாவாரியா குறிச்சுகிட்டு அங்க இருந்து நடக்க ஆரம்பிச்சுடுச்சு .

தொடர்ந்து பயணம் போன சிங்கம் ஒரு ஆட்டுக் கூட்டத்தை பார்த்துச்சு அது எல்லாம் மொத்தமா பயந்து போய் ஒரு இடத்தில சுணங்கி கிடக்கிறதை பார்த்த குட்டி சிங்கம் எதுக்காக இப்படி பேந்த பேந்த முழிச்சுக்கிட்டு நிக்கிறீங்க அப்படின்னு கேட்டுச்சு அதுக்கு அந்த ஆட்டுக்குட்டிகள் சொன்னது எங்கள மேய்ச்சிகிட்டு வந்த பையன் எங்கேயோ போயிட்டான் அவன் வர்ற வரைக்கும் இங்க காத்துகிட்டு இருக்கோம் அப்படின்னு சொல்லுச்சு

அதைக் கேட்ட சிங்கத்துக்கு அதான் ஆடு மேய்க்கிறவன் எங்கேயோ போயிட்டானே நீங்க காட்டுக்குள்ள போயி ஓடி தப்பிச்சு தனிமையில் சுதந்திரமா வாழலாமில்ல அப்படின்னு நினைச்சு ஆனா எதுவும் சொல்லாம அதோட அப்பா சொன்ன மாதிரி டைரியில குறிப்பு மட்டும் எழுதிக்கிட்டு அங்க இருந்து நடக்க ஆரம்பிச்சிருச்சு

மறுநாள் காலையில அந்த காட்டு வழியே போய்கிட்டு இருக்கப்ப ஒரு புலி ஒரு முயல வேட்டையாட போய்கிட்டு இருக்கிறத பார்த்துச்சு ஆனா அந்த குட்டி முயல் ஒரு பொந்துக்குள்ள ஓடி ஒளிஞ்சிருச்சு உடனே புலி கொஞ்சம் நிதானமா அந்த இடத்திலேயே பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் முயற்சி செய்து பார்த்துச்சு முடியலன்னதும் வேற பக்கம் போயிடுச்சு இதையும் பார்த்து தன்னுடைய டைரியில குறிப்பு எடுத்துக்கிட்ட சிங்கம் நேரா அந்த மஞ்சள் பூ இருக்கிற மஞ்சள் காட்டுக்கு போச்சு

அந்த மஞ்சள் பூ இருக்கிற இடத்தில ஒரு வயசான குரங்கு உட்கார்ந்து ஏதோ எழுதிக்கிட்டு இருந்துச்சு அதை பார்த்தவுடனே இது சாதாரண குரங்கு இல்ல இந்த குரங்குக்கு எழுதலாம் தெரிஞ்சிருக்கு இது ரொம்ப படிச்ச குரங்கா இருக்கும் அப்படின்னு குட்டி சிங்க ராஜாவுக்கு புரிஞ்சுச்சு உடனே அது கிட்ட கொஞ்சம் பேச ஆரம்பிச்சுச்சு அப்பத்தான் அந்த குரங்கு கேட்டுச்சு நீ தான் நான் பெரிய ராஜா சொல்படி மஞ்சப்பூ பறிக்க வந்த வீரன் குட்டி சிங்க ராஜாவானு கிண்டலா கேட்டுச்சு

ஓ என்ன பத்தி உங்களுக்கு எல்லாமே தெரியுமா அப்படின்னு கேட்டுச்சு அப்பத்தான் அந்த குரங்கு கேட்டுச்சு உங்க அப்பா நீ வழியில் சந்திக்கிறவங்கள பத்தி எல்லாம் குறிப்பு எழுதி கொண்டுவர சொல்லி சொல்லி இருந்தாரே இதுவரைக்கும் எத்தனை பேரை செந்திச்சு இருக்க என்ன என்ன எழுதி இருக்க அந்த டைரிய என்கிட்ட கொடு அப்படின்னு கேட்டுச்சு

அப்பத்தான் சிங்க ராஜாக்கு தோணுச்சு தான் மூணு பேர சந்திச்சிருக்கேன் ஆனா மூணு பேரும் வித்தியாசமா நடந்துக்கிட்டாங்க இதுவரையும் தன்னோட வாழ்க்கையில சந்திக்காதவங்களா இருந்தாங்க இவங்களால எனக்கு என்ன பயன் அப்படின்னு குரங்கு கிட்ட கேட்டுச்சு

குட்டி சிங்கத்தோட டைரிய வாங்கி படிச்ச அந்த புத்திசாலி குரங்கு அந்த கரடி கிட்ட இருந்து நீ என்ன தெரிஞ்சுகிட்ட அப்படின்னு கேட்டுச்சு அதுக்கு சிங்க ராஜா சொல்லுச்சு அது தன்னோட குடும்பத்தை நினைத்து வருத்தப்படுது எப்படியும் கோடை காலம் வந்தே தீரும் அது இன்னும் கொஞ்சம் நாளைக்கு சோகமா தான் இருக்கும் அப்படின்னு எனக்கு தோணுச்சு அத என்னால மாத்த முடியாது அதனால என்னோட பயணத்தை தொடர்ந்தேன்னு சொல்லுச்சு

அத கேட்ட குரங்கு சொல்லுச்சு யாராவது தன்னோட குட்டிகளையும் குடும்பத்தையும் பசியோடு வச்சிருப்பாங்களா அப்படி இருக்கத்தான் முடியுமா கரடிகளுக்கு சேமித்து வைக்கிற பழக்கம் இல்ல இருந்தாலும் அதுங்களுக்கு மாற்று உணவை தேடி போய் தான் ஆகணும் மலைகள் மேலே ஏறி தேன் சேகரித்து தன்னோட குடும்பத்தோட பசிய போக்கி ஆக்கணும் அதை விட்டுட்டு இப்படி சோர்வா உட்கார்ந்து இருக்கிறது நல்லதுன்னு நீ நினைக்கிறியா அப்படின்னு கேட்டாரு

அப்பத்தான் சிங்க ராஜாவுக்கு புரிஞ்சுச்சு சோகமா உக்காந்திருக்க அதனாலையோ ஆத்திரப்படுவதாலையோ ஒன்னும் நடக்கப்போரதில்லைனு ,

அடுத்ததா அந்த ஆட்டுக்குட்டிகளை பார்த்து உனக்கு என்ன தோணுச்சு அப்படின்னு கேட்டுச்சு குரங்கு அதுக்கு சிங்க ராஜா சொல்லுச்சு அந்த ஆட்டு குட்டிங்க கண்டிப்பா காட்டுக்குள்ள போயி சுதந்திரமா வாழ பழகி இருக்கணும் அடுத்தவங்கள அடிக்கிற பொழப்பு ஒரு பொழப்பா அப்படின்னு கேட்டுச்சு

அப்பத்தான் குரங்கு சொல்லுச்சு அந்த ஆட்டுக்குட்டிகளோட வளர்ப்பு முறை அப்படித்தான் இருக்கு அதுகளால் காட்டுக்குள்ள ஒரு நாள் கூட உயிரோட இருக்க முடியாது. அதனால அதுக்கு தன்னுடைய எஜமான உள்ள வருகைக்காக காத்திருக்கிறது தான் நல்ல விஷயம் அதுகளுக்கு இருந்த பொறுமை உனக்கு ஏன் கிடையாது அப்படின்னு கேட்டுச்சு பொறுமையோடு பெருமை அப்பத்தான் சிங்கக்குட்டி ராஜாவுக்கு புரிஞ்சுச்சு

அடுத்ததா சொல்லுச்சு நீ பார்த்தியே தோத்துப்போன ஒரு புலியை அது ஒன்னும் கோழையான புலி கிடையாது அந்த புலி உன்ன விட ஒரு காலத்துல கோவமான புலியாதான் இருந்துச்சு பார்க்கிற ஒவ்வொரு மிருகங்களையும் அடிச்சு சாப்பிட்டுக்கிட்டே தான் இருந்துச்சு ஆனா கொஞ்ச காலத்துக்கு அப்புறம் அதோட வளர்ந்த புலிகளுக்கு ஏற்பட்ட ஆபத்து அதோட கோபத்தை குறைச்சிடுச்சு இதில் இருந்து கோபத்தை எப்படி கட்டுப்படுத்தலாம் என்ற உன்னோட கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன் அப்படின்னு சொல்லுச்சு

இதையெல்லாம் கேட்டுக்கிட்டே இருந்த குட்டி ராஜா அமைதியா மஞ்சள் பூவை எடுத்துட்டு தன்னுடைய அப்பாவை பார்க்க கிளம்புச்சு தன்னோட மகனை காட்டுக்குள்ள அனுப்புன அந்த சிங்க ராஜா ரொம்ப நாளா அதோட வருகைக்காக காத்துக்கிட்டு இருந்துச்சு ஆனா காட்டுக்குள்ள போன குட்டி சிங்கத்துக்கு பதிலா அந்த புத்திசாலி குரங்கு தான் வந்துச்சு

என்ன குரங்காரே உங்களை சந்தித்து என் மகன் நல்ல மனநிலையோட திரும்பி வருவான்னு நினைச்சேன் அவன் திரும்பி வராம நீங்க வர்றீங்க அப்படின்னு கேட்டுச்சு அந்த பெரிய சிங்கம் அப்பத்தான் அந்த புத்திசாலி குரங்கு உங்க மகன் அவசரக்காரனா இருக்கலாம் கோவப்பட்டு கண்டபடி நடந்திருக்கலாம் ஆனால் ஒரு விஷயம் அவனுக்கு நல்லதுன்னு பட்டுச்சுன்னா அதை ஏத்துக்கிட்டு அதை மறுபடி மறுபடி முயற்சி செஞ்சு பார்க்கிறான்

அவனோட பொறுமையை கோபத்தையும் கட்டுப்படுத்த அளவுக்கு அவன் சந்திச்ச மிருகங்கள் அவனுக்கு நல்ல ஒரு பாடமா இருந்துச்சு அந்தப் பாடத்தை மத்தவங்களுக்கு சொல்லி அவங்க வாழ்க்கையை மேம்படுத்தனும்னு சொல்லி காட்டுக்குள்ள இருக்குற மிருகங்கள்ல சோகமா இருக்கிற மிருகங்களையும் உதவி கிடைக்காமல் இருக்கிற மிருகங்களையும் கோவத்தினால் செயல் இழந்து போன மிருகங்களையும் நல்லபடியா அவன் பாதுகாத்துக் கொண்டே இருக்கான்.

அதனால இந்த காட்டுக்கு மட்டும் அவன் வருங்கால ராஜா கிடையாது மஞ்சள் காட்டுக்கும் இனிமே அவன் தான் அரசன் அப்படின்னு சொல்லுச்சு அந்த புத்திசாலி குரங்கு அப்பத்தான் அந்த பெரிய ராஜாக்கள் தெரிஞ்சிச்சு என்னோட மகன் இந்த காட்டுக்கு மட்டும் ராஜாவா இல்லாம சுத்தி இருக்கிற எல்லா காட்டுக்கும் பேரரசனா மாறிட்டான் அப்படின்ற விஷயம் புரிஞ்சுச்சு