New King Selection : புது ராஜா பரிதாபங்கள் :-ஒரு மிகப்பெரிய ராஜ்யத்தை ஒரு பேரரசர் ஆட்சி செஞ்சுகிட்டு இருந்தாரு அவருக்கு ரொம்ப வயசாகிட்டதால அவரோட மகன அரசராக்கிட்டு காட்டுக்கு போய் வாழ நினைச்சாரு

ஆனா அவரோட மகன் ரொம்ப முட்டாளா இருந்தான் அதனால பேரரசரோட மந்திரிங்க எல்லாம் அவரை அரசரா ஆக்குறதுக்கு விருப்பமில்லைன்னு சொன்னாங்க,இவ்வளவு தைரியமா மந்திரிங்க பேசுவதும் அடுத்து என்ன நடக்க போகுதுனு அரண்மனையில இருந்த எல்லாரும் அரசரையே பார்த்தாங்க.

மந்திரிங்க சொன்ன ஆலோசனைய கேட்ட பேரரசர் ரொம்ப கோபப்பட்டார் என் மகன் அப்படி ஒன்னும் முட்டாள் கிடையாது அவனுக்கு இந்த ராஜ்ஜியம் முழுசும் சொந்தம் அப்படின்னு சொன்னாரு ,அத கேட்ட மந்திரிங்க எல்லாரும் நாங்க அவருக்கு ஒரு போட்டி வைக்கிறோம் அதுல அவரு ஜெயிச்சாருன்னா அவருக்கு மந்திரி பதவி கொடுங்க இல்லைன்னா உங்களோட மகளுக்கு அரச பதவி கொடுங்க அப்படின்னு சொன்னாங்க

இதைக் கேட்ட பேரரசரும் சரின்னு சொன்னாரு அப்பத்தான் அந்த நாட்டுல வாழ்ந்துகிட்டு இருக்கிற எல்லா விவசாயிகளும் வந்து அரசர் கிட்ட எங்களுக்கு புதுசா கக்க கூட்டத்தால விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு தொல்லை வந்திருக்குனு சொன்னாங்க

நாங்க எவ்வளவு விவசாயம் செஞ்சாலும் அதுல பாதிய காக்கா கூட்டம் குத்தி தின்னுட்டு போயிடுதுங்க அதனால எங்களுக்கு ரொம்ப நஷ்டம் வருது தயவு செஞ்சு இந்த பிரச்சனையை நீங்க தான் தீர்த்து வைக்கணும் அப்படின்னு கேட்டாங்க

இதைக் கேட்ட மந்திரிமார்கள் எல்லாரும் அடடா புதுசா வரப்போற அரசர சோதிக்கிறதுக்கு இது ஒரு நல்ல விஷயம் இந்த விஷயத்தை பேரரசரோட மகனுக்கு சொல்லி இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க சொல்லி அனுப்பிச்சிட்டாங்க

பிரச்சனை என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்ட அரசரோட மகன் நாட்டுல இருக்கிற எல்லா விவசாய நிலத்தையும் சுத்தி பார்க்க போனாரு அப்படி போறப்ப ஒரு யானையை பார்த்தான் அந்த இளவரசன் அதோட காது நிக்காம ஆடிட்டு இருக்கிறத பார்த்தான் உடனே அவனுக்கு ஒரு முட்டாள்தனமான யோசனை வந்துச்சு

நேரா அரண்மனைக்கு திரும்பி வந்த அவன் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒவ்வொரு யானையை பரிசா கொடுத்தான் ஒவ்வொரு யானையோட காதுலயும் ஒரு மணிய கட்டி விட்டான் இதை பார்த்த மந்திரிங்க கிட்ட இந்த யானை விடாமல் அதோட காத ஆட்டிகிட்டு இருக்கு பார்த்தீங்களா ,இப்ப அதுல கட்டி இருக்கிற மணி ஆடுனதும் வர்ற சத்தத்த கேட்டு எல்லா காக்கையும் பறந்து போய்டும் எப்படி என்னுடைய யோசனை அப்படின்னு சொன்னான்

இதைக் கேட்ட மந்திரங்களுக்கு அதிர்ச்சியா இருந்துச்சு அடடா இப்படி ஒரு முட்டாளான யோசனையை செய்யப் போறாரே அப்படின்னு யோசிச்சாங்க அப்பத்தான் அவங்களுக்கு தோனுச்சு இவன் உண்மையாவே எவ்வளவு பெரிய முட்டாள்னு பேரரசருக்கு நிரூபிக்கிறதுக்கு சரியான நேரம்னு நினைச்சு அமைதியா இருந்தாங்க எல்லா மந்திரிகளும்

பேரரசுரோட மகன் சொன்ன மாதிரியே எல்லா விவசாய நிலத்துக்கும் ஒவ்வொரு யானை அரண்மனையில் இருந்து அனுப்பி வச்சாங்க அதோட எல்லா யானையோட காதுலயும் மணி கட்டி இருந்துச்சு மறுநாள் காலையில அரண்மனை வாசல்ல ஒரே கலவரமா இருந்துச்சு

தூக்கத்திலிருந்து எந்திரிச்ச பேரரசர் வெளியில என்ன சத்தம்ன்னு மந்திரிங்க கிட்ட கேட்டாரு ,அதுக்கு மந்திரிங்க சொன்னாங்க நீங்களே போய் பாருங்க என்ன நடக்குதுன்னு ,உங்க முட்டாள் மகன் செஞ்ச செயலோட பாதிப்பு எந்த அளவுக்கு இருக்குனு விசாரிங்கனு சொன்னாங்க

வெளிய வந்து என்ன நடக்குதுன்னு கேட்ட பேரரசர் கிட்ட அந்த விவசாயிங்க சொன்னாங்க காக்கா கூட்டதினால எங்களுக்கு கொஞ்சம் தான் நஷ்டம் ஆச்சு இப்போ உங்க மகனால எங்களோட மொத்த விவசாயமும் நஷ்டமா ஆயிடுச்சு அப்படின்னு சொன்னாங்க

இதைக் கேட்ட அரசருக்கு ஒண்ணுமே புரியல விளக்கமா சொல்ல சொல்லி சொன்னாரு, அப்பத்தான் ஒரு விவசாயி அரசர்கிட்ட வந்து உங்க மகன் எங்க எல்லாத்துக்கும் ஒவ்வொரு யானை கொடுத்தாரு அதை நாங்க எங்களோட தோட்டத்துல கட்டி வச்சோம் அது காதுல கட்டி இருந்த மணி சத்தத்துக்கு எல்லா காக்கையும் பறந்து போச்சு

உடனே இடைமறிச்ச பேரரசர் அப்ப உங்க காக்கா தொல்ல எல்லா தீர்ந்திருக்கணுமே என்னோட மகன் இவ்வளவு புத்திசாலி பாத்திங்களா அப்படின்னு சொன்னாரு ,அப்பத்தான் அந்த விவசாயி திரும்பவும் சொன்னாரு காக்கா பிரச்சனை தீர்ந்துடுச்சு ஆனா நீங்க கொடுத்த யானை இருக்கிற விவசாய பொருள் எல்லாத்தையும் தின்னு தீர்த்துடுச்சு மிச்சம் இருக்கிற சோளத்தட்டைகளை கூட தன்னோட காலால மிதிச்சு நசுக்கி எங்களுக்கு ஒண்ணுமே இல்லாத படி செஞ்சுருச்சு அப்படின்னு சொன்னாரு

உடனே மந்திரிமார்களை கூப்பிட்டு இந்த விஷயத்தை எப்படி தீர்க்கிறது என்னுடைய மகன் பெரு முட்டாள்னு நானும் ஒத்துக்கிறேன்னு சொன்னாரு உடனே மந்திரிங்க எல்லாரும் அரசே நடந்தது நடந்திருச்சு இந்த பிரச்சனையை உங்க மகள் கிட்ட சொல்லுங்க அவங்க இந்த புது பிரச்சனையை தீர்க்கிறார்களான்னு பார்ப்போம் அப்படின்னு சொன்னாங்க ,அரசருக்கும் இது சரினு பட்டுச்சு

உடனே இளவரசிய கூப்பிட்டு நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் சொன்னாங்க, உடனே இளவரசி ஒரு நல்ல யோசனை சொன்னாங்க நடந்தது நடந்து போச்சு நீங்க இன்னும் கொஞ்ச நாள் அந்த யானையை உங்க நிலத்துல கட்டி வையுங்க அது போடுற சாணியை எல்லாம் உரமாக்கி உங்க மண்ணை வளப்படுத்துங்கள்,

யானையோட முழு பலத்தையும் பயன்படுத்தி தேவையில்லாத மரங்களை அகற்றது மேடான பகுதியில இருக்கிற பாறைகளை அகற்றது மாதிரியான விவசாய வேலைகள் எல்லாம் இப்ப நீங்க செய்யுங்க மழைக்காலம் அடுத்த மாசம் ஆரம்பிக்க இருக்கு அப்போ உங்களுக்கு இந்த அரசாங்கம் விதைகளையும் போதுமான பண உதவியும் செய்யும் அப்படின்னு சொன்னாங்க

இதைக் கேட்ட பேரரசருக்கு தன்னுடைய ராஜ்யத்தை ஆளுவதற்கு சரியான ஆள் தன்னுடைய மகள் தான் அப்படின்னு முடிவு செஞ்சாரு
