Mulla’s Donkey for Sale – முல்லாவின் கழுதையும் பூனையும்

Mulla’s Donkey for Sale – முல்லாவின் கழுதையும் பூனையும் –முல்லா சந்தையில போயி வியாபாரம் செஞ்சு அந்த பணத்துல வாழுறவர்ன்னு நம்ம எல்லாத்துக்கும் தெரியும் ,சந்தைக்கு போயி வியாபாரம் செய்ற அவருக்கு துணைக்கு ஒரு கழுதயை வச்சிக்கிட்டு இருந்தாரு, அந்த கழுதை மேல தான் சந்தையில வியாபாரம் செய்ய வேண்டிய பொருட்களை ஏத்திகிட்டு போயி வியாபாரம் செய்வாரு

Introduction - Mulla Prepares for Market with His Beloved Donkey

அதுக்காகவே அவரு ஒரு கழுதயை ரொம்ப செல்லமா வளர்த்தாரு கொஞ்ச நாளா அந்த கழுத ரொம்ப சேட்டை செய்ய ஆரம்பிச்சுச்சு இதை பார்த்த முல்லாவுக்கு என்ன செய்யுறதுனு கூட தெரியாம இருந்தாரு, சேட்டை அதிகமான அந்த கழுதை அடிக்கடி கயித்தை அவுத்துக்கிட்டு காட்டுக்குள்ள ஓடிப் போயிரும் அதைத் தேடிப் பிடித்து வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுக்கு முல்லா படாத பாடு பட்டாரரு

Mulla's Daily Struggle Fetching the Runaway Donkey

ஒரு நாள் காலையில தூங்கி எந்திரிச்ச முல்லா கழுதை இருக்கான்னு தோட்டத்து பக்கம் போய் பார்த்தாரு அங்க கழுத இல்ல அடடா இந்த கழுத மறுபடியும் காட்டுக்குள்ள போயிருச்சு போல அப்படின்னு ரொம்ப கோபப்பட்டார் முல்லா அன்னைக்கு முழுசும் தேடிப் பார்த்த முல்லா கழுத கிடைக்காம ரொம்ப விரக்தியில இருந்தாரு

Morning Wake-Up - Mulla Discovers the Donkey Gone Again

ரொம்ப சோர்ந்து போன முல்லா டீக்கடையில போயி டீ வாங்கிட்டு அங்க இருக்குற கட்டில் உட்கார்ந்து இருந்தாரு அப்ப அங்க வந்த முல்லாவோட நண்பர்கள் என்ன முல்லா உன்னோட சேட்டைக்கார கழுத மறுபடியும் ஓடி போயிருச்சு போல அப்படின்னு கிண்டலா கேட்டாங்க

Mulla at the Tea Shop, Teased by Friends

ஏற்கனவே கோவத்துல இருந்த முல்லா கழுத மட்டும் இன்னைக்கு திருப்பி வந்துச்சுன்னா அதை பத்து ரூபாய்க்கு வித்துருவேன் அப்படின்னு கோவத்துல சொன்னாரு அதுக்கு அந்த நண்பர்கள் அது திரும்பி வந்தாத்தான் உனக்கு பத்து ரூவாயாவது கிடைக்கும் அது வரவே இல்லைன்னா உனக்கு அதுவும் கிடைக்காது அப்படின்னு கிண்டலா சொன்னாங்க

Mulla's Angry Vow to Sell the Donkey

அப்பத்தான் கழுத கணக்கிற சத்தம் கேட்டுச்சு திரும்பி பார்த்தா முல்லாவோட கழுத அங்க நின்னுகிட்டு இருந்துச்சு உடனே அவரோட நண்பர்கள் எல்லாம் சொன்னாங்க அடடா கழுதை திரும்பி வந்துடுச்சு இப்ப இந்த முல்லா இந்த கழுதையை பத்து ரூபாய்க்கு வித்தே ஆகணும் யார் இந்த கழுதய பத்து ரூபாய்க்கு வாங்கிக்கிறா அப்படின்னு கேட்டாங்க

The Donkey Returns Unexpectedly, Friends Call for a Buyer

அடடா கோபத்தில் வாயை விட்டுட்டோமே இதை எப்படி சமாளிக்கிறதுனு முல்லா ஒரு நிமிஷம் யோசிச்சாரு அப்பத்தான் முல்லாவுக்கு ஒரு நல்ல யோசனை வந்துச்சு நான் இந்த கழுதையை வாங்குறப்ப ஒரு பூனையும் சேர்த்து வாங்கினேன் அதனால நான் கழுதைய மட்டும் தனியா வைக்க மாட்டேன் என்னோட பூனையும் சேர்த்துதான் விப்பேன் அப்படின்னு சொன்னாரு

Friends Tease Mulla's Vow Further

அதுக்கு அந்த நண்பர்கள் கழுதையவையும் 10 ரூபாய்க்கு வாங்க போறோம் பூனையை வாங்குறதுக்கு எங்களுக்கு என்ன பெரிய விஷயமா அப்படின்னு கேட்டாங்க

அப்பத்தான் முல்லா சொன்னாரு யாராவது கழுதையை பத்து ரூபாய்க்கு வாங்கணும்னு நினைச்சீங்கன்னா பூனையும் சேர்த்து வாங்கிக்கோங்க ஆனா பூனையோட விலை 2000 ரூபா அப்படின்னு சொன்னாரு

Mulla's Clever Twist with the Cat, Everyone Laughs

அப்பத்தான் முல்லாவோட நண்பர்கள் சொன்னாங்க மறுபடியும் இந்த ஆளு ஜெயிச்சிட்டாங்க, முல்லா கழுதய பத்து ரூபாய்க்கு வாங்கி முல்லாவ ஜெயிச்சிடலாம்னு எல்லாம் நெனச்சிட்டு இருக்குறப்ப இப்படி ஒரு குண்ட தூக்கி போட்டான் பாரு அப்படின்னு சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க இதை கேட்ட எல்லாரும் சந்தோஷமா சிரிச்சாங்க