விலங்குகளின் குழந்தைகள் தினம்-Jupiter & the Monkey

Jupiter & the Monkey – விலங்குகளின் குழந்தைகள் தினம் :- ஒரு காட்டுல குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டுச்சு

Jupiter & the Monkey

அதனால காட்டு மிருகங்கள் எல்லாம் தங்களோட குழந்தைகளுக்கு மேக்அப் போட்டு கூட்டிட்டு வாங்கனு சொன்னாரு சிங்க ராஜா

அழகான குழந்தைக்கு நிறய பரிசு கொடுக்க போறேனும் சொன்னாரு சிங்கராஜா

உடனே எல்லா மிருகங்களும் தங்களோட குழந்தைகளுக்கு புது ட்ரெஸ் போட்டு அழகா மேக்அப் போட்டு கூட்டிட்டு வந்தாங்க

Jupiter & the Monkey

எல்லா குழந்தைகளையும் பார்த்து கூட்டம் கைதட்டுச்சு

கடைசியா குரங்கோட குழந்தையை பார்த்ததும் எல்லாரும் சிரிச்சிட்டாங்க

மூக்கு தட்டையா வாய் கோணலா இருந்த குரங்கோட குட்டி அழகா இல்லைனு எல்லாரும் சொன்னாங்க

அப்ப சிங்கராஜா கேட்டாரு குரங்காரே இந்த கூட்டத்துலயே அழகான குழந்தை யாரோடதுனு கேட்டாரு

அதுக்கு கொஞ்சம் கூட யோசிக்காம என்னோட குழந்தைதான் அழகானதுனு சொல்லுச்சு அந்த தாய் குரங்கு

Jupiter & the Monkey

அப்பத்தான் சிங்க ராஜா மேடை ஏறி சொன்னாரு ,குரங்கோட குழந்தைய பார்த்து அசிங்கமா இருக்குனு சொன்னவர்களும் ,அத பார்த்து சிரிச்சவங்களும் தான் இந்த காட்டோட மிக பெரிய முட்டாள்கள்

ஒரு தாய்க்கு எப்போதும் தன் பிள்ளைதான் அழகு இந்த உண்மை தெரியாம நீங்க வாழ்ந்து ஒன்னும் ஆகப்போறது கிடையாதுன்னு சொல்லி

குரங்கோட குழந்தைக்கு முதல் பரிசு கொடுத்தாரு சிங்க ராஜா

நீதி : தாயின் கண்களில் குழந்தைகளே தெய்வம்

Moral: Mother love is blind