ஈட்டியும் கேடயமும் – அக்பர் பீர்பால் கதை – The Sharpest Shield and Sword

ஈட்டியும் கேடயமும் – அக்பர் பீர்பால் கதை – The Sharpest Shield and Sword -Akbar Birbal Story in Tamil:- ஒரு ஊருல ஒரு கொல்லன் இருந்தாரு ,அவரு ரொம்ப திமிர் பிடிச்சி இருந்தாரு ,

இந்த உலகத்துலயே தான் செய்யிற ஈட்டி தான் மிக சிறந்ததுனு தம்பட்டம் அடிச்சிகிட்டே இருப்பாரு

ஒருநாள் அக்பரோட அரசவைக்கு வந்தாரு அந்த கொல்லன் ,அரசர் கிட்ட சொன்னாரு ,நான் தயாரிக்கிற ஈட்டி தான் இந்த உலகத்துலயே சிறந்தது அந்த ஈட்டிய பயன்படுத்தினா எல்லா கேடயமும் தூள் தூள் ஆகிடும்

அதே மாதிரி என்னோட தயாரிப்புல உருவான கேடயமும் இந்த உலகத்துல இருக்குற எல்லா ஈட்டியயும் தங்கும்னு சொன்னாரு

அவரோட திமிர்பேச்ச கேட்ட அக்பர் இதுக்கு பீர்பால் என்ன பதில் சொல்ல போறாருனு அவளோட அவர பாத்தாரு

மெதுவா கொல்லன்கிட்ட வந்த பீர்பால் சொன்னாரு நீ இந்த கேடயத்த வச்சுக்கோ நான் உன்னோட ஈட்டிய வச்சி குத்துறேன் எந்த பொருள் நல்ல பொருள்னு கண்டுபிடிச்சிடலாம்னு சொன்னாரு

கொல்லனுக்கு ஒரே திகைப்பா போயிடுச்சு ,அடடா ஆணவத்துல வரக்கூடாத இடத்துக்கு வந்து ,சொல்ல கூடாதது எல்லாத்தையும் சொல்லி இப்படி மாட்டிக்கிட்டமேன்னு நினச்சு திகைச்சு போய் நின்னாரு

அப்படி குத்தும்போது ஈட்டி வளஞ்சாலும் நான்தான் பொறுப்பு ,கேடயம் ஒடஞ்சலும் நான்தான் பொறுப்பு அப்படினு நினச்சு மெதுவா அங்க இருந்து ஓடி போய்ட்டாரு

கொல்லனோட பொருள வச்சே கொல்லனோட திமிர அடக்குன பீர்பால பாத்து வியந்தார் அரசர் அக்பர்